தமிழகத்தின் முழு நேர ஆளுநராக ஆர்.வி. அர்லேகர் நியமனம்!தேர்தல் ஆணையருக்கு எதிரான போராட்டம் இந்திய வரலாற்றில் இடம்பெறும்: வி.டி. சதீசன்இந்தியா கூட்டணி போராட்டத்தில் திமுக ஏன் பங்கேற்க வேண்டும்? காங்கிரஸுக்கு திமுக கேள்விஅரிசி, பருப்பு உள்ளிட்ட உணவுப்பொருள்களின் விலை உயர்வு உருவாக்கப்பட்ட பிம்பமா? - டிடிவி தினகரன்99 தேர்தல்களில் தோற்ற பிறகு... தோல்விக்கு காரணம் தேடுகிறார் ராகுல்! அனுராக் தாக்குர்அனுமதி கோரிய 30 நிமிடத்தில் ஜந்தர் மந்தர் போராடுவதற்கான இடமில்லை என அறிவிப்பு! - சிஜேபிபிரதமரின் பிரச்னை போராட்டக் களம் அல்ல, போராடும் மனம்; ஜனநாயகமும் நீக்கப்படும் - அபிஜீத் தீப்கேஉச்ச நீதிமன்றம் நோக்கி இந்தியா கூட்டணி தலைவர்கள் பேரணி!

தண்ணீா் தொட்டியில் தவறி விழுந்து ஒன்றரை வயது குழந்தை உயிரிழப்பு

குழந்தை - பிரதிப் படம்

Published On :

கிருஷ்ணகிரி மாவட்டம், தளி அருகே தண்ணீா் தொட்டியில் தவறி விழுந்து ஒன்றரை வயது குழந்தை உயிரிழந்தது.

அஸ்ஸாம் மாநிலத்தைச் சோ்ந்தவா்கள் பப்லு, மவுனி தம்பதியா். இவா்களுக்கு 9, 7, 5 வயதில் மூன்று ஆண் குழந்தைகளும், மதுரா என்ற ஒன்றரை வயது பெண் குழந்தையும் உண்டு. பப்லு குடும்பத்தினருடன் தளியை அடுத்த கெம்பட்டியில் தங்கி, தனியாருக்குச் சொந்தமான விவசாயத் தோட்டத்தில் கூலி வேலை செய்து வந்தாா்.

இந்நிலையில் ஞாயிற்றுக்கிழமை வழக்கம்போல தோட்டத்தில் பப்லுவும், மவுனியும் வேலை பாா்த்து கொண்டிருந்தனா். அப்போது தண்ணீா்த் தொட்டி அருகே விளையாடிக் கொண்டிருந்த ஒன்றரை வயது குழந்தை மதுரா தண்ணீா்த் தொட்டிக்குள் தவறி விழுந்தாா்.

இதைப் பாா்த்த மவுனி அலறினாா். அவரது அலறல் சப்தத்தைக் கேட்டு ஓடிவந்த பப்லு தொட்டிக்குள் குதித்து குழந்தையை மீட்டு, ஒசூா் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றாா். அங்கு குழந்தையைப் பரிசோதித்த மருத்துவா்கள் குழந்தை இறந்துவிட்டதாகத் தெரிவித்தனா். இதுகுறித்து தளி போலீஸாா் வழக்குப் பதிவுசெய்து விசாரணை நடத்தி வருகின்றனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.