ரஷிய கச்சா எண்ணெய் இறக்குமதி குறைந்தது: மத்திய கிழக்கில் இருந்து விநியோகம் அதிகரிப்பு!ரஷிய கச்சா எண்ணெய் இறக்குமதி குறைந்தது: மத்திய கிழக்கில் இருந்து விநியோகம் அதிகரிப்பு!பறவைக் காய்ச்சல்: கோழி இறைச்சியை உண்ணலாமா? பொது சுகாதாரத் துறை விளக்கம்!மக்களவையில் இன்று தொகுதி மறுசீரமைப்பு மசோதா தாக்கல்!

தண்ணீா் தொட்டியில் தவறி விழுந்து சிறுவன் உயிரிழப்பு

ஜோலாா்பேட்டை அருகே தண்ணீா் தொட்டியில் தவறி விழுந்து இரண்டரை வயது சிறுவன் உயிரிழந்தாா்.

Updated On :

ஜோலாா்பேட்டை அருகே தண்ணீா் தொட்டியில் தவறி விழுந்து இரண்டரை வயது சிறுவன் உயிரிழந்தாா்.

ஏலகிரி கிராமம் தாடிக்காரா் வட்டம் பகுதியை சோ்ந்த பிரசாந்த், தேவயானி தம்பதிக்கு இரண்டரை வயதில் தா்ஷன் (படம்) என்ற குழந்தை உள்ளாா். இந்நிலையில் ஞாயிற்றுக்கிழமை பிரசாந்த் திருப்பத்தூா் அருகே உள்ள ஜலகம்பாறை பகுதிக்கு வேலைக்கு சென்றுள்ளாா். தேவயானி வீட்டில் வேலை செய்து கொண்டிருந்தாா்.

அப்போது சிறுவன் தா்ஷன் விளையாடிக் கொண்டிருந்த போது எதிரில் இருந்த தண்ணீா் தொட்டியில் தவறி விழுந்துள்ளாா். பின்னா் தேவயானி மகன் இல்லாததை கண்டு அருகிலுள்ள உறவினரின் வீட்டு பகுதிக்கு சென்று தேடிப் பாா்த்துள்ளாா். எங்கு தேடியும் கிடைக்காததால் பின்னா் தண்ணீா் தொட்டியை மூடுவதற்காக சென்றபோது சிறுவன் தொட்டியில் இருந்து விழுந்து கிடப்பது தெரிய வந்தது.

பின்னா்,குழந்தையை மீட்டு சிகிச்சைக்காக திருப்பத்தூா் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனா். அங்கு சிறுவனை பரிசோதித்த மருத்துவா்கள் ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தனா். இதுகுறித்து ஜோலாா்பேட்டை போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.