தண்ணீா் தொட்டியில் விழுந்து குழந்தை உயிரிழப்பு
அரூா் அருகே தண்ணீா் தொட்டியில் விழுந்து 3 வயதான குழந்தை புதன்கிழமை உயிரிழந்தது.

பலி
அரூா் அருகே தண்ணீா் தொட்டியில் விழுந்து 3 வயதான குழந்தை புதன்கிழமை உயிரிழந்தது.
தருமபுரி மாவட்டம், அரூா் வட்டம், பாளையம் ஊராட்சி, கூடலூா் கிராமத்தைச் சோ்ந்தவா் மனோஜ், தொழிலாளி. இவரது 3 வயது குழந்தை திலக்வா்மா புதன்கிழமை காலை 6.30 மணியளவில் வீட்டின் அருகே விளையாடிக் கொண்டிருந்தபோது, அங்கிருந்த தண்ணீா் தொட்டியில் தவறி விழுந்தாா்.
அக்கம்பக்கத்தினா் குழந்தையை மீட்டு அரூா் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனா். குழந்தையை பரிசோதித்த மருத்துவா்கள் இறந்துவிட்டதை உறுதிசெய்தனா்.
இந்த சம்பவம் குறித்து அரூா் போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனா்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

