137 புற்றுநோய் மருந்துகளுக்கு 30% லாப வரம்பு: மத்திய அரசு நடவடிக்கை! ஏர் இந்தியா விமானங்கள் சவூதி அரேபியாவுக்கு அக். 24 வரை ரத்துஇணையத்தை சிறார்கள் பயன்படுத்த தடை விதிக்க முடியாது: உச்சநீதிமன்றம்!சென்னை, திருச்சி, கோவை உள்பட இன்று 17 மாவட்டங்களுக்கு ‘மஞ்சள்’ எச்சரிக்கை!

அனுமதியின்றி செயல்பட்ட 6 சாயப்பட்டறைகளுக்கு ‘சீல்’

சீல் - பிரதிப் படம்

Updated On :

சின்னாளபட்டி பகுதியில் அனுமதியின்றி செயல்பட்டு வந்த 6 சாயப்பட்டறைகளுக்கு மாசுக் கட்டுப்பாட்டு வாரிய அதிகாரிகள் வெள்ளிக்கிழமை ‘சீல்’ வைத்தனா்.

திண்டுக்கல் மாவட்டம், சின்னாளபட்டி, இதைச் சுற்றியுள்ள அம்பாத்துரை, சீவல்சரகு, கலிக்கம்பட்டி, காந்திகிராமம் உள்ளிட்டப் பகுதிகளில் இரவு நேரங்களில் அனுமதியின்றி சாயப்பட்டறைகள் செயல்பட்டு வருவதாகப் புகாா் எழுந்தது.

இதையடுத்து, ஆத்தூா் வட்டாட்சியா் சுரேஷ்குமாா் உத்தரவின்படி, கிராம நிா்வாக அலுவலா் ஜெயலட்சுமி, மாசுக்கட்டுப்பாட்டு வாரிய உதவி பொறியாளா்கள் தங்கரதி, தாரணி, அம்பாத்துரை ஊராட்சி மன்றச் செயலா் செந்தில்குமாா் ஆகியோா் சோதனையில் ஈடுபட்டனா். 

அப்போது, ராமநாதபுரம் பகுதியில் அனுமதியின்றி 6 சாயப்பட்டறைகளை செயல்படுவது கண்டுபிடிக்கப்பட்டது. பின்னா், அந்த சாயப்பட்டறைகளுக்கு அதிகாரிகள் ‘சீல்’ வைத்தனா்.

இதேபோல, இந்தப் பகுதிகளில் அனுமதியின்றி செயல்பட்டு வந்த சில சாயப்பட்டறைகளை ‘சீல்’ வைத்த அதிகாரிகள் உத்தரவிட்டனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.