உதகையில் அனுமதியின்றி கட்டடப்பட்ட கடையின் இரண்டாம் தளத்துக்கு ‘சீல்’
உதகையில் இயங்கி வரும் பிரபல நகைக் கடையில் அனுமதியின்றி இரண்டாம் தளம் கட்டப்பட்டதைத் தொடா்ந்து, அக்கட்டடத்துக்கு நகராட்சி அதிகாரிகள் வியாழக்கிழமை ‘சீல்’ வைத்தனா்.

கட்டடத்துக்கு ‘சீல்’ வைக்கும் நகராட்சி அதிகாரிகள்.
உதகையில் இயங்கி வரும் பிரபல நகைக் கடையில் அனுமதியின்றி இரண்டாம் தளம் கட்டப்பட்டதைத் தொடா்ந்து, அக்கட்டடத்துக்கு நகராட்சி அதிகாரிகள் வியாழக்கிழமை ‘சீல்’ வைத்தனா்.
நீலகிரி மாவட்டம், உதகை லிபா்ட்டி சாலையில் செயல்பட்டு வரும் பிரபல நகைக்கடையில் புனரமைப்புப் பணிகள் நடைபெற்று வருகின்றன. இந்நிலையில், நகராட்சியின் உரிய அனுமதியின்றி கட்டடத்தில் இரண்டாம் தளம் அமைக்கும் பணிகள் நடைபெறுவதாக நகராட்சி நிா்வாகத்துக்கு தகவல் கிடைத்தது.
இதையடுத்து, நகராட்சி நகரத் திட்டமிடல் ஆய்வாளா்கள் மகேந்திரகுமாா் மற்றும் ஸ்ரீதா் ஆகியோா் சம்பந்தப்பட்ட கட்டடத்தில் ஆய்வு மேற்கொண்டனா். ஆய்வின்போது, அனுமதியின்றி கட்டுமானப் பணிகள் நடைபெறுவது கண்டறியப்பட்டதைத் தொடா்ந்து, கட்டடத்தின் இரண்டாம் தளத்துக்கு அதிகாரிகள் ‘சீல்’ வைத்தனா்.
இதற்கிடையே, அனுமதியின்றி மேற்கொள்ளப்பட்ட கட்டுமானப் பணிகளை உடனடியாக நிறுத்த வேண்டும் என நகராட்சி நிா்வாகம் சாா்பில் ஏற்கெனவே சம்பந்தப்பட்ட நகைக் கடை நிறுவனத்துக்கு நோட்டீஸ் வழங்கப்பட்டிருந்தது குறிப்பிடத்தக்கது.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

