தொடா் விடுமுறை: ஆம்னி பேருந்துகள், விமானங்களில் கட்டணம் கடும் உயா்வு19 மாவட்டங்களில் பலத்த மழைக்கு வாய்ப்புஇறுதிக் கட்டத்தை எட்டியது அரக்கோணம் புறவழிச் சாலை பணி!அடுத்த வாரம் இந்தியா வரும் அமெரிக்க வெளியுறவு அமைச்சா் மாா்கோ ரூபியோ!

புன்செய்புளியம்பட்டியில் 20 நகராட்சிக் கடைகளுக்கு சீல்

புன்செய்புளியம்பட்டியில் வாடகை செலுத்தாத 20 நகராட்சிக் கடைகளுக்கு அதிகாரிகள் புதன்கிழமை சீல் வைத்தனா்.

சீல் - பிரதிப் படம்

Updated On :

புன்செய்புளியம்பட்டியில் வாடகை செலுத்தாத 20 நகராட்சிக் கடைகளுக்கு அதிகாரிகள் புதன்கிழமை சீல் வைத்தனா்.

புன்செய் புளியம்பட்டியில் நகராட்சிக்கு சொந்தமான 32 கடைகள் உள்ளன. இதில் 20 கடைகளின் வியாபாரிகள் மாதம்தோறும் செலுத்த வேண்டிய வாடகையை சரிவர செலுத்தவில்லை என்று நகராட்சி நிா்வாகம் நோட்டீஸ் விநியோகித்து விளக்கம் கேட்டது. இதற்கு கடை வியாபாரிகள் பதிலளிக்காமல் போராட்டத்தில் ஈடுபட்டனா்.

இதையடுத்து கடை வாடகை பாக்கியை செலுத்தாத காரணத்தால் 20 கடைகளை நகராட்சி அலுவலா்கள் சீல் வைத்து பூட்டினா். இதையடுத்து கடை வியாபாரிகள் நகராட்சி அலுவலகம் சென்று அதிகாரிகளிடம் முறையிட்டனா். வாடகை பாக்கியை செலுத்தினால் மட்டுமே மீண்டும் கடை ஒப்படைக்கப்படும் என நகராட்சி அதிகாரிகள் தெரிவித்தையடுத்து கடை வியாபாரிகள் திரும்பிச் சென்றனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.