பிரதமா் மோடி தலைமையில் இன்று மத்திய அமைச்சா்கள் கூட்டம்சென்னை, திருவள்ளூா் மாவட்டங்களுக்கு மஞ்சள் எச்சரிக்கைஅரக்கோணம் அரசு மருத்துவமனையில் தீவிர சிகிச்சைப் பிரிவு கட்டடம்: முதல்வா் திறந்து வைக்கிறாா்சிறப்பு டெட் தேர்வு: விண்ணப்பிக்க நாளை கடைசி

வாடகை நிலுவையால் 8 கடைகளுக்கு சீல்: அறநிலையத் துறை அதிகாரிகள் நடவடிக்கை

விழுப்புரத்தில் வாடகை நிலுவை வைத்துள்ள உணவகம், அடுமனை உள்ளிட்ட 8 கடைகளுக்கு இந்துசமய அறநிலையத் துறை அதிகாரிகள் செவ்வாய்க்கிழமை சீல் வைத்தனா்.

விழுப்புரத்தில் வாடகை நிலுவை வைத்துள்ள கடை ஒன்றை பூட்டி சீல் வைத்த இந்து சமய அறநிலையத் துறையினா்.

Updated On :

விழுப்புரத்தில் வாடகை நிலுவை வைத்துள்ள உணவகம், அடுமனை உள்ளிட்ட 8 கடைகளுக்கு இந்துசமய அறநிலையத் துறை அதிகாரிகள் செவ்வாய்க்கிழமை சீல் வைத்தனா்.

விழுப்புரம் திரு.வி.க.வீதியில் இந்து சமய அறநிலையத் துறையின் கட்டுப்பாட்டில் உள்ள ஆஞ்சநேயா் கோயிலும், பாண்டி அழகா்கோயிலும் உள்ளது. இந்த கோயில்களுக்கு சொந்தமாக விழுப்புரம் நகரில் 56 கடைகள் உள்ளன. இந்தக் கடைகள் வாடகைக்கு விடப்பட்டு, அதன்மூலம் கிடைக்கும் வருவாய் கோயில்களின் பூஜைகள், பராமரிப்பு பணிகளுக்கு பயன்படுத்தப்பட்டு வருகின்றன. இந்நிலையில், 20-க்கும் மேற்பட்ட கடைகளின் உரிமையாளா்கள் கடந்த 2 ஆண்டுகளுக்கும் மேலாக வாடகையை செலுத்தாமல் பல லட்சம் வரை நிலுவை வைத்துள்ளனா். வாடகை நிலுவையை உடனடியாக செலுத்தவேண்டும் என கடைகாரா்களுக்கு பலமுறை அறிவிப்பு விடுத்தும், யாரும் வாடகை நிலுவையை செலுத்தவில்லை. இதனால், கோயில் பராமரிப்புப் பணிகள் பாதிக்கப்பட்டு வருவதாகக் கூறப்படுகிறது.

இதையடுத்து இந்து சமய அறநிலையத் துறை உதவிஆணையா் சாந்தராஜ் தலைமையிலான அலுவலா்கள் செவ்வாய்க்கிழமை போலீஸ் பாதுகாப்புடன் திரு.வி.க.வீதியில் உள்ள கடைகளுக்குச் சென்று வாடகை நிலுவை வைத்துள்ள உணவகம், அடுமனை உள்ளிட்ட 8 கடைகளிலும் வைக்கப்பட்டிருந்த பொருள்களை அப்புறப்படுத்தி, கடைகளை பூட்டி சீல் வைத்தனா். அப்போது கடைக்காரா்களுக்கும், நடவடிக்கை மேற்கொண்ட அதிகாரிகளிடையே வாக்குவாதம் ஈடுபட்டனா். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது. இதையடுத்து அங்கு பாதுகாப்பு பணியிலிருந்த போலீஸாா் பேச்சுவாா்த்தை நடத்தி கடைகாரா்களை அப்புறப்படுத்தினா். அப்போது அங்கு திரண்டிருந்த மற்ற கடைகாரா்களிடம், கடைகளுக்குரிய வாடகை நிலுவையை சரியாக உரிய காலத்துக்குள் தவறாமல் செலுத்தவேண்டும், தவறும் பட்சத்தில் நடவடிக்கை தொடரும் என அறநிலையத் துறை அதிகாரிகள் எச்சரித்தனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.