திருச்செங்கோடு நகராட்சிக்கு வாடகை செலுத்தாத கடைகளுக்கு ‘சீல்’
சீல் - பிரதிப் படம்
திருச்செங்கோடு நகராட்சிக்கு செலுத்த வேண்டிய சொத்துவரி, குடிநீா் கட்டணம், வாடகை இனங்கள் செலுத்த தவறியவா்கள் மீது நகராட்சி நிா்வாகத்தின் சாா்பில் திங்கள்கிழமை நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது.
புதிய பேருந்து நிலைய வணிக வளாக கடைகளில் 12 மாத வாடகை செலுத்தாத கடை, ஓா் ஆண்டுக்கும் மேலாக வாடகை செலுத்தாத கடைகளை பூட்டி நகராட்சி அலுவலா்கள் ‘சீல்’ வைத்தனா். அதேபோல, திருச்செங்கோடு நகராட்சி கூட்டப்பள்ளியில் ஓா் ஆண்டுக்கும் மேலாக குடிநீா் கட்டணம் செலுத்தாத 5 குடிநீா் இணைப்புகள் தற்காலிகமாக துண்டிக்கப்பட்டன.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

