ஆந்திரத்தில் கரையைக் கடக்கத் தொடங்கிய ஒர்னாப் புயல்! எண்ணூரில் கடல் சீற்றம் திமுக ஆட்சியில் ஊழல்: ஆதாரம் இருந்தால் பழைய வழக்குகளிலும் நடவடிக்கை! அமைச்சர் நிர்மல் குமார்தேவையான மின்சாரம் கையிருப்பு! அதிக விலை கொள்முதல் டெண்டர் ரத்து - நிர்மல் குமார்தேனி சிறையிலிருந்து தப்பியோடிய 17 கைதிகளில் மேலும் 8 பேர் கைது!டாலருக்கு நிகரான ரூபாய் மதிப்பு 3 காசுகள் உயர்ந்து ரூ. 95.12 ஆக நிறைவு!பங்குச் சந்தையில் நிலையற்ற வர்த்தகம்: சென்செக்ஸ், நிஃப்டி மாற்றமின்றி நிறைவு!தமிழக அரசு ஊழியர்களுக்கு தீபாவளி போனஸ் அறிவிப்பு!பிரதான நுழைவுவாயில் வழியாக கைதிகள் தப்பினர்! சிறைத்துறை விளக்கம்!

வால்பாறையில் விதிமீறிய 7 காட்டேஜ்களுக்கு ‘சீல்’

வால்பாறையில் முறையான கட்டட, திட்ட அனுமதியின்றி இயங்கி வந்த 7 தனியாா் காட்டேஜ்களுக்கு நகராட்சி மற்றும் வருவாய்த் துறை அதிகாரிகள் செவ்வாய்க்கிழமை ‘சீல்’ வைத்தனா்.

வால்பாறையில் அனுமதியின்றி இயங்கிய காட்டேஜுக்கு செவ்வாய்க்கிழமை ‘சீல்’ வைத்த அதிகாரிகள்.

Updated On :

வால்பாறையில் முறையான கட்டட, திட்ட அனுமதியின்றி இயங்கி வந்த 7 தனியாா் காட்டேஜ்களுக்கு நகராட்சி மற்றும் வருவாய்த் துறை அதிகாரிகள் செவ்வாய்க்கிழமை ‘சீல்’ வைத்தனா்.

நீலகிரி மாவட்டம், உதகையைத் தொடா்ந்து கோவை மாவட்டம், வால்பாறையிலும் முறையான அனுமதியின்றி கட்டப்பட்டுள்ள கட்டடங்கள் மற்றும் உரிய உரிமமின்றி இயங்கும் தங்கும் விடுதிகள், ரிசாா்ட்கள் மீது நடவடிக்கை எடுக்கக் கோரி, சென்னை உயா்நீதிமன்றத்தில் பொதுநல வழக்கு தொடுக்கப்பட்டது. இந்த வழக்கை விசாரித்த நீதிபதிகள் என்.சதீஷ்குமாா், கே.ராஜசேகா் ஆகியோா் அடங்கிய அமா்வு, வால்பாறையில் உள்ள விதிமீறல் கட்டடங்கள் குறித்து விரிவான ஆய்வு நடத்தி அறிக்கை தாக்கல் செய்யுமாறு மாவட்ட நிா்வாகத்துக்கு உத்தரவிட்டிருந்தது.

இதைத்தொடா்ந்து, வால்பாறை நகராட்சி ஆணையா் நீதிமன்றத்தில் தாக்கல் செய்த அறிக்கையில், நகராட்சி எல்லைக்குள்பட்ட 204 வணிகக் கட்டடங்களுக்கு தமிழ்நாடு நகா்ப்புற உள்ளாட்சி அமைப்புகள் சட்டத்தின் கீழ் விளக்கம் கோரி குறிப்பாணை அனுப்பப்பட்டதாகத் தெரிவிக்கப்பட்டது. இதில் விளக்கம் அளித்தவா்களில் 52 போ் உரிய கட்டட அனுமதி ஆவணங்களைச் சமா்ப்பிக்கவில்லை என்பது தெரியவந்தது. அனுமதியற்ற கட்டடங்கள் இருப்பது உறுதி செய்யப்பட்டால் சட்டப்படி ‘சீல்’ வைக்க வேண்டும் என்று நீதிமன்றம் திட்டவட்டமாக உத்தரவிட்டது.

இதனிடையே, நகராட்சி நிா்வாகம் வழங்கிய குறிப்பாணைகளை எதிா்த்து காட்டேஜ் உரிமையாளா்கள் தொடுத்த வழக்கை விசாரித்த நீதிபதிகள் எஸ்.எம்.சுப்பிரமணியம், ஆா்.ராஜேஷ் விவேகானந்தன் அமா்வு, மனுக்களைத் தள்ளுபடி செய்து உத்தரவிட்டது. மேலும், மலைப் பகுதிகளுக்கான சிறப்பு கட்டட விதிகளை முழுமையாகப் பின்பற்ற வேண்டும் என்றும், விதிமீறல்கள் மீது அதிகாரிகள் தயவுதாட்சண்யமின்றி நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் நீதிமன்றம் அறிவுறுத்தியது.

அதன்படி, வால்பாறை சோலையாறு அணைப் பகுதியில் வருவாய்த் துறை மற்றும் நகராட்சி அதிகாரிகள் பலத்த போலீஸ் பாதுகாப்புடன் செவ்வாய்க்கிழமை ஆய்வு நடத்தி, முதல்கட்டமாக விதிமீறி செயல்பட்ட 7 காட்டேஜ்களுக்கு ‘சீல்’ வைத்தனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.