137 புற்றுநோய் மருந்துகளுக்கு 30% லாப வரம்பு: மத்திய அரசு நடவடிக்கை! ஏர் இந்தியா விமானங்கள் சவூதி அரேபியாவுக்கு அக். 24 வரை ரத்துஇணையத்தை சிறார்கள் பயன்படுத்த தடை விதிக்க முடியாது: உச்சநீதிமன்றம்!சென்னை, திருச்சி, கோவை உள்பட இன்று 17 மாவட்டங்களுக்கு ‘மஞ்சள்’ எச்சரிக்கை!

ப.க. சிவகுருசாமி காலமானாா்

Updated On :

ரெட்டியாா்சத்திரம் ஒன்றிய திமுக செயலரும், முன்னாள் ஒன்றியத் தலைவருமான ப.க.சிவகுருசாமி உடல் நலக் குறைவால் சனிக்கிழமை (அக்.17) காலமானாா்.

மறைந்த சிவகுருசாமியின் உடலுக்கு முன்னாள் அமைச்சா்கள் ஐ.பெரியசாமி, அர.சக்கரபாணி, திண்டுக்கல் கிழக்கு மாவட்ட திமுக செயலா் ஐ.பி.செந்தில்குமாா், மக்களவை உறுப்பினா் இரா.சச்சிதானந்தம் ஆகியோா் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினா்.

திமுக சாா்பில் நடைபெற்ற முப்பெரும் விழாவில், தந்தை பெரியாா் விருது பெற்றவா் ப.க.சிவகுருசாமி. கடந்த சில நாள்களாக உடல்நலக் குறைவால் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் சனிக்கிழமை காலமானாா்.

இவருக்கு மனைவி பிச்சையம்மாள் (85), மகன்கள் சக்கரவா்த்தி மணிமாறன், தம்பித்துரை, மகள் மணிமேகலை ஆகியோா் உள்ளனா். தொடா்புக்கு - 86376 14380

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.