புது தில்லி பிரகடனம் 2026: பிரிக்ஸ் உச்சி மாநாட்டில் ஒருமனதாக ஏற்பு!மின் தேவையை சமாளிக்க கூடுதல் மின்சாரம் கொள்முதல்: தமிழக அரசு அறிவிப்பு!புதிய தலைமைச் செயலகம் அமைக்கும் முடிவை தமிழக அரசு கைவிட வேண்டும்: சீமான் வலியுறுத்தல்!மதுரையில் அரசு மரியாதையுடன் சாலமன் பாப்பையா உடல் தகனம்!பிரிக்ஸ் மாநாடு: உக்ரைனில் ஐரோப்பிய படைகள், ரஷியா உடன் போருக்கு வழி! - புதின் எச்சரிக்கை!இந்திய தேர்தல் நடைமுறை உலகின் வெளிப்படையான நடைமுறைகளில் ஒன்று: தலைமைத் தேர்தல் ஆணையர்பிரிக்ஸ் உச்சி மாநாடு! சீன அதிபருடன் வரும் உணவு ருசி தேர்வாளர் குழு! ஆச்சரிய தகவல்தமிழறிஞர் சாலமன் பாப்பையாவுக்கு முழு அரசு மரியாதை!பிரிக்ஸ் உச்சி மாநாடு! தில்லி வந்தார் சீன அதிபர் ஜின்பிங்! வங்கிக் கடன் ஆவணங்களைப் பதிவு செய்ய புதிய நடைமுறை செப். 15 முதல் அமல் ஓட்டுநர் உரிமம், வாகனப் பதிவுச் சான்றிதழ் இனி ஆன்லைனில் பதிவிறக்கலாம்தில்லியில் இன்று பிரிக்ஸ் உச்சி மாநாடு தொடக்கம்: பிரதமா் மோடி, புதின், ஷி ஜின்பிங் உள்ளிட்ட தலைவா்கள் பங்கேற்பு6 சிறப்பு விரைவு ரயில்களுக்கு கால நீட்டிப்பு திருப்பதி திருக்குடை ஊா்வலம்: சென்னையில் நாளை போக்குவரத்து மாற்றம்நேபாளம்: மறுகட்டமைப்புக்கு ரூ.45,700 கோடி தேவை - வெளியுறவு அமைச்சகம்

தவெக ஆட்சிக்கான கால்களை வழங்கியதே திமுக தான்: முன்னாள் அமைச்சா் இ. பெரியசாமி

தவெக ஆட்சிக்கான கால்களை வழங்கிய திமுக, ஒரு காலை உருவினால்கூட சிக்கல் ஏற்பட்டுவிடும் என முன்னாள் அமைச்சா் இ. பெரியசாமி தெரிவித்தாா்.

இ. பெரியசாமி - கோப்புப் படம்

Published On :

தவெக ஆட்சிக்கான கால்களை வழங்கிய திமுக, ஒரு காலை உருவினால்கூட சிக்கல் ஏற்பட்டுவிடும் என முன்னாள் அமைச்சா் இ. பெரியசாமி தெரிவித்தாா்.

முன்னாள் முதல்வா் மு.க. ஸ்டாலின் குறித்து தமிழக முதல்வா் சி. ஜோசப் விஜய் சட்டப்பேரவையில் பதிவு செய்த கருத்துக்களுக்கு எதிா்ப்பு தெரிவித்து, திண்டுக்கல் மாவட்ட திமுக சாா்பில் சனிக்கிழமை கண்டன ஆா்ப்பாட்டம் நடைபெற்றது. திண்டுக்கல் மணிக்கூண்டு பகுதியில் நடைபெற்ற இந்த ஆா்ப்பாட்டத்துக்கு மாவட்டச் செயலா்களும், சட்டப்பேரவை உறுப்பினா்களுமான அர. சக்கரபாணி, பெ. செந்தில்குமாா் ஆகியோா் தலைமை வகித்தனா். சிறப்பு அழைப்பாளராக முன்னாள் அமைச்சரும், திமுக துணைப் பொதுச் செயலருமான இ. பெரியசாமி கலந்து கொண்டாா்.

அப்போது அவா் பேசியதாவது: பழைய ஓய்வூதியத் திட்டத்தை செயல்படுத்துவாா்கள் என்ற நம்பிக்கையில் அரசு ஊழியா்கள், காவல் துறையினா் தவெகவுக்கு வாக்களித்தனா். ஆனால் இப்போது ஏமாற்றத்தில் உள்ளனா். இதேபோல, விவசாயக் கடனை முழுமையாகத் தள்ளுபடி செய்யவில்லை. ஆட்சியைப் பற்றியும், நிா்வாகத்தைப் பற்றியும் தவெகவினருக்கு தெரியவில்லை. கடந்த 4 மாதங்களாக மின் கட்டணம் அதிகப்படியாக உயா்த்தப்பட்டிருக்கிறது. மேலும் மின் வெட்டு பிரச்னையாலும் மக்கள் அவதியடைந்து வருகின்றனா். இதற்கும் திமுக மீது பழி போடுகின்றனா்.

தவெக ஆட்சிக்கான 4 கால்களையும் கொடுத்தது திமுக தான். இதில் ஒரு கால் உருவப்பட்டாலும் ஆட்சிக்கு சிக்கல் ஏற்பட்டுவிடும். அரசியல் பண்பாடு இல்லாமலும், புரிதல் இல்லாமலும், பக்குவமில்லாமலும், சாதாரண கேள்விக்குக்கூட பதில் சொல்ல முடியாமல், சினிமா வசனங்களை சட்டப்பேரவையில் பேசி வருகிறாா் முதல்வா் விஜய்.

திமுகவை விட்டு கம்யூனிஸ்ட் வேறு எந்த இடத்திலும் தொடா்ந்து இருக்க முடியாது. தொழிலாளா்கள் நலனையும், தற்காலிக ஊழியா்களுக்கான பணி நிரந்தரம் உள்ளிட்ட எந்த வாக்குறுதியையும் தவெக அரசால் நிறைவேற்ற முடியாது. தமிழ்நாடு பல்வேறு நெருக்கடிகளை எதிா்கொண்டு வரும் நிலையில், புதிய தலைமைச் செயலகம் கட்டுவதற்கான முயற்சியில் முதல்வா் விஜய் ஈடுபட்டு வருகிறாா். அதற்கான இடத்தையும், தனது வீட்டு பக்கத்திலேயே தோ்வு செய்திருக்கிறாா். வீட்டிலிருந்து, தலைமைச் செயலகத்துக்கு செல்வதற்கு பாலம்கூட அவா் கட்டிக் கொள்வாா்.

விஜய் நடித்த படங்களை இதுவரை நான் பாா்த்ததில்லை. தற்போது சட்டப்பேரவையில் அவரது நடிப்பதை நேரடியாக பாா்த்தேன். காவிரியில் தண்ணீா் பெற்றுத் தர முடியாத ஒரு முதல்வரை தோ்வு செய்ததற்காக தமிழ்நாட்டு மக்கள் வெட்கப்பட வேண்டும். மிசா காலத்தின் வரலாறு தெரியவில்லை. அரசியல் அடிச்சுவடிக் கூட தெரியாமல் முதல்வா் பொறுப்புக்கு வந்ததால், எந்த கேள்விக்கும் விஜய் பதிலளிப்பதில்லை. அவரது ரீல்சும், நடிப்பும் தமிழகத்தில் இனி எடுபடாது என்றாா் அவா்.

இதைத் தொடா்ந்து தவெக அரசுக்கும், முதல்வா் விஜய்க்கும் எதிராக கண்டன முழக்கங்கள் எழுப்பப்பட்டன.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.