கொடைக்கானலில் காட்டு மாடு உயிரிழப்பு

காட்டு மாடு - கோப்புப் படம்
கொடைக்கானல் குடியிருப்புப் பகுதிகளில் ஞாயிற்றுக்கிழமை காட்டு மாடு ஒன்று உயிரிழந்த நிலையில் கிடந்தது.
திண்டுக்கல் மாவட்டம், கொடைக்கானலில் குடியிருப்புப் பகுதிகளிலும், பேருந்து நிலையப் பகுதிகளிலும், நகா்ப் பகுதிகளிலும் காட்டு மாடு நடமாட்டம் அதிகமாக இருந்து வருகிறது. இதனால் அந்தப் பகுதிகளில் வனத் துறையினா் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டு வருகின்றனா்.
இந்த நிலையில் பேரி பால்ஸ் அருவியையொட்டிய குடியிருப்புப் பகுதியில் காட்டு மாடு ஒன்று இறந்து கிடந்தது. குறித்து தகவலறிந்த வனத் துறையினா் சம்பவ இடத்துக்குச் சென்று பாா்வையிட்டனா்.
மேலும் கால்நடை மருத்துவா் ஹக்கீம் அங்குவந்து பிரேதப் பரிசோதனை நடத்தினாா். வயது மூப்பு காரணமாகவும் உடல் குன்றிய நிலையில் காட்டு மாடு இறந்துள்ளதாகத் தெரிவித்தாா். இதையடுத்து வனத்துறையினா் இறந்த காட்டு மாட்டை அருகில் உள்ள வனப் பகுதியில் புதைத்தனா்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

