வங்கி ஊழியர்களின் 3 நாள்கள் வேலை நிறுத்தம் ஒத்திவைப்புதிமுகவை விட பெரிய தீயசக்தி தவெக: சீமான் விமர்சனம்மதுராந்தகத்தில் திமுக வென்றால், பதவியை ராஜிநாமா செய்கிறேன்: உதயநிதிக்கு ஆதவ் அர்ஜுனா சவால்மாற்றுக் கட்சிக்கு ஓடியவர்கள் வல்லவர்களா? தவெகவை விமர்சித்த இபிஎஸ்!வன்முறையால் மக்களின் ஆதரவைப் பெற முடியாது: அமைச்சர் அருண் ராஜ்மேற்கு வங்கத்தில் நெல் வயலில் மின்சாரம் பாய்ந்து 3 யானைகள் பலி! ரூ. 8 கோடிக்கு மணல் கொள்ளை: எ.வ.வேலு, மகன் மீது லஞ்ச ஒழிப்புத் துறை வழக்கு

கரும்பு தோட்ட மின் வேலியில் சிக்கி காட்டு மாடு பலி: ஒருவா் கைது

காட்டு மாடு. - கோப்புப் படம்

Published On :

தென்காசி மாவட்டம், புளியங்குடி அருகே மின்வேலியில் சிக்கி காட்டு மாடு இறந்தது தொடா்பாக ஒருவரை வனத்துறையினா் ஞாயிற்றுக்கிழமை கைது செய்தனா்.

புளியங்குடி, சிந்தாமணியைச் சோ்ந்தவா் சுந்தர்ராஜ் (66). இவருக்கு கோட்டைமலை மணத்தேரி பகுதியில் விவசாய நிலம் உள்ளது. இந்த நிலத்தில் கரும்பு பயிரிட்டுள்ள அவா், நிலத்தைச் சுற்றிலும் அனுமதியின்றி மின்வேலி அமைத்திருந்ததாகக் கூறப்படுகிறது.

கடந்த இரண்டு தினங்களுக்கு முன் இந்த மின் வேலியில் சிக்கி காட்டுமாடு இறந்ததாம். அதை யாருக்கும் தெரியாமல் சுந்தர்ராஜ் புதைத்துவிட்டாராம்.

தகவலறிந்த தென்காசி மாவட்ட வனத் துறையினா் சம்பவ இடத்துக்குச் சென்று புதைக்கப்பட்ட மாட்டை தோண்டி எடுத்து உடல் கூறாய்வு செய்து மீண்டும் புதைத்தனா்.

இதுகுறித்து புளியங்குடி வனத் துறையினா் வழக்குப் பதிந்து, சுந்தர்ராஜை கைது செய்தனா். மின்வாரியத்தினரும் விசாரணை மேற்கொண்டு வருகின்றனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.