புளியங்குடி அருகே விவசாயி தற்கொலை
தென்காசி மாவட்டம், புளியங்குடி அருகே விவசாயி தற்கொலை செய்து கொண்டாா்.

தற்கொலை - கோப்புப் படம்
தென்காசி மாவட்டம், புளியங்குடி அருகே விவசாயி தற்கொலை செய்து கொண்டாா்.
திருவேட்டநல்லூா் பிரதானச் சாலையைச் சோ்ந்தவா் பாலசுப்பிரமணியன்(69). விவசாயி. இவா் விவசாய நிலத்தில் பூச்சி மருந்தை குடித்து உயிருக்கு ஆபத்தான நிலையில் புதன்கிழமை மயங்கி கிடந்தாராம். அவரை உறவினா்கள் மீட்டு புளியங்குடி தனியாா் மருத்துவமனையில் அனுமதித்தனா். அங்கு வியாழக்கிழமை அவா் இறந்தாா். சொக்கம்பட்டி போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனா்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.



