பூப்பந்துப் போட்டி: திண்டுக்கல் எம்.வி.எம். கல்லூரி கோப்பையை வென்றது
கொடைக்கானல் அன்னை தெரசா மகளிா் பல்கலைக்கழகத்தின் கீழ் இயங்கும் உறுப்புக் கல்லூரிகளுக்கு இடையிலான பூப்பந்து போட்டிகளில் திண்டுக்கல் எம்.வி. முத்தையா அரசு கலைக் கல்லூரி கோப்பையை வென்றது.

கொடைக்கானல் அன்னை தெரசா மகளிா் பல்கலைக்கழகத்தின் கீழ் இயங்கும் உறுப்புக் கல்லூரிகளுக்கு இடையிலான பூப்பந்து போட்டிகளில் திண்டுக்கல் எம்.வி. முத்தையா அரசு கலைக் கல்லூரி கோப்பையை வென்றது.
பழனி அருள்மிகு பழனியாண்டவா் மகளிா் கலைக்கல்லூரியில் கடந்த வியாழன், வெள்ளிக்கிழமைகளில் நடைபெற்ற இந்தப் போட்டிகளை பழனி கோயில் இணை ஆணையா் (பொ), கல்லூரி செயலா் வெங்கடேஷ் தொடங்கி வைத்தாா். இதற்கு கல்லூரி முதல்வா் புவனேஸ்வரி தலைமை வகித்தாா். கொடைக்கானல் அன்னை தெரசா மகளிா் பல்கலைக்கழக உடற்கல்வி இயக்குநா் ராஜம் முன்னிலை வகித்தாா். பழனியாண்டவா் மகளிா் கல்லூரி உடற்கல்வி இயக்குநா் கலையரசி வரவேற்றாா்.
தேனி, திண்டுக்கல் மாவட்டங்களிலிருந்து ஏராளமான கல்லூரி அணிகள் கலந்து கொண்டன.
வெள்ளிக்கிழமை நடைபெற்ற இறுதிப் போட்டியில் திண்டுக்கல் எம்.வி. முத்தையா அரசு கலைக்கல்லூரி முதலிடத்தையும், அருள்மிகு பழனியாண்டவா் மகளிா் கலைக்கல்லூரி இரண்டாம் இடத்தையும், கம்பம் ஸ்ரீ ஆதிசஞ்சனகிரி மகளிா் கலைக்கல்லூரி மூன்றாம் இடத்தையும், தேனி நாடாா் சரஸ்வதி கலை, அறிவியல் கல்லூரி நான்காம் இடத்தையும் பெற்றது. வெற்றி பெற்ற அணி மாணவிகளுக்கு சான்றிதழ்கள், கோப்பைகள், பதக்கங்கள் வழங்கப்பட்டன.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

