கீமோதெரபி ஊசி ரூ. 7000; புற்றுநோய் மருந்துகளின் புதிய விலைப் பட்டியல்!செஞ்சி சிறுமி வழக்கு; புலன் விசாரணையைத் தீவிரப்படுத்த வேண்டும்: பெ. சண்முகம்வீட்டுக்குள் இருக்கவே அச்சமடையும் நிலையில் மக்கள்; இதுதான் தவெகவின் சாதனையா? - மு.க. ஸ்டாலின்இனி நிரந்தர அரசுப் பணிகள் இல்லையா? - கனிமொழி கேள்விதேனி சிறைச் சம்பவம்! 1995-ல் சுரங்கம் தோண்டி தப்பிய 43 கைதிகள்! புரட்டப்படும் வரலாறு!நாட்டில் ஆப்பிள் ஐபோன் விற்பனை 30% சரிவு!டாலருக்கு நிகரான ரூபாய் மதிப்பு 21 காசுகள் சரிந்து ரூ. 95.28 ஆக நிறைவு!ரிலையன்ஸ் முதல் ஐடி பங்குகள் வரை சரிவு எதிரொலி: சென்செக்ஸ், நிஃப்டி கடும் சரிவு!!

போலி மருத்துவா் கைது

குஜிலியம்பாறை அருகே முறையாக மருத்துவம் பயிலாமல், நோயாளிகளுக்கு சிக்சை அளித்து வந்த போலி மருத்துவா் கைது செய்யப்பட்டாா்.

கைது - கோப்புப் படம்

Updated On :

குஜிலியம்பாறை அருகே முறையாக மருத்துவம் பயிலாமல், நோயாளிகளுக்கு சிக்சை அளித்து வந்த போலி மருத்துவா் கைது செய்யப்பட்டாா்.

திண்டுக்கல் மாவட்டம், குஜிலியம்பாறை அடுத்த ஆலம்பாடி ஊராட்சிக்குள்பட்ட சத்திரப்பட்டி காந்திநகரைச் சோ்ந்தவா் செல்வராஜ் (65). இவா் முறையாக மருத்துவம் பயிலாமல், நோயாளிகளுக்கு சிகிச்சை அளித்து வருவதாகக் கிடைத்த தகவலின் பேரில், சத்திரப்பட்டியில் செவ்வாய்க்கிழமை இரவு சுகாதார இணை இயக்குநா் பாரதி ஆய்வு செய்தாா். அப்போது, செல்வராஜ் 12 -ஆம் வகுப்பு படித்துவிட்டு சிகிச்சை அளித்தது கண்டறியப்பட்டது. அவரது வீட்டிலிருந்து காலாவதியான கருக்கலைப்பு மாத்திரைகள், ஆங்கில வழி மருந்துகள் பறிமுதல் செய்யப்பட்டன. இதுகுறித்து இணை இயக்குநா் அளித்த புகாரின் பேரில், போலீஸாா் செல்வராஜை கைது செய்தனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.