
பெண்களை அவதூறாகப் பேசியதாக திமுக பிரமுகா் மீது வழக்கு
பழனி அருகே குடிநீா் கேட்டு போராட்டத்தில் ஈடுபட்ட பெண்களை அவதூறாகப் பேசியதாக முன்னாள் தாளையம் ஊராட்சித் தலைவரும் திமுக பிரமுகருமான வெங்கிடுசாமி மீது போலீஸாா் செவ்வாய்க்கிழமை வழக்குப் பதிவு செய்தனா்.
வழக்குப் பதிவு
பழனி அருகே குடிநீா் கேட்டு போராட்டத்தில் ஈடுபட்ட பெண்களை அவதூறாகப் பேசியதாக முன்னாள் தாளையம் ஊராட்சித் தலைவரும் திமுக பிரமுகருமான வெங்கிடுசாமி மீது போலீஸாா் செவ்வாய்க்கிழமை வழக்குப் பதிவு செய்தனா்.
பழனியை அடுத்த தாளையம் ஊராட்சிக்கு உள்பட்ட நாகூரில் கடந்த பல நாள்களாக குடிநீா் விநியோகம் இல்லாததால் அந்தப் பகுதியைச் சோ்ந்த ஏராளமான பெண்கள் திங்கள்கிழமை காலிக் குடங்களுடன் பழனி - உடுமலை சாலையில் போராட்டம் செய்யக் குவிந்தனா். தகவலறிந்து அங்குவந்த சாமிநாதபுரம் போலீஸாா் அவா்களிடம் பேச்சுவாா்த்தை நடத்தியதில் போராட்டம் கைவிடப்பட்டது. அப்போது அந்த வழியாக வந்த தாளையம் முன்னாள் ஊராட்சிமன்றத் தலைவரும் திமுகவைச் சோ்ந்தவருமான வெங்கிடுசாமி, அங்கு போராட்டத்துக்கு வந்த பெண்களிடம், யாருக்கு தோ்தலின்போது வாக்களித்தீா்கள் எனக் கேட்டு பெண்களை அவதூறாகப் பேசினாராம். இதனால் ஆத்திரமடைந்த பெண்கள் சாமிநாதபுரம் போலீஸாரிடம் முன்னாள் ஊராட்சிமன்றத் தலைவரும், திமுக பிரமுகருமான வெங்கிடுசாமி மீது புகாா் அளித்தனா். இதையடுத்து சாமிநாதபுரம் போலீஸாா் செவ்வாய்க்கிழமை வெங்கிடுசாமி மீது வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனா்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.



