மம்தா முடிவால் எதிர்க்கட்சிகள் ஓரணியில் மீண்டும் திரள வாய்ப்புபாஜக வாக்குகளைக் குறைக்க சமாஜவாதி தீவிரம்: அகிலேஷ் யாதவ் புதிய முயற்சி!21 மாவட்டங்களில் இன்று பலத்த மழைக்கு வாய்ப்புதில்லி எஸ்ஐஆா்: முரண்பாடுகள் கொண்ட வாக்காளா் பட்டியலில் அத்வானி, சிசோடியா பெயா்கள்!

எரிவாயு உருளை விநியோக விவகாரம்! கொடைக்கானல் கீழ்மலையில் பொதுமக்கள் சாலை மறியல்!

கே.சி.பட்டி சாலையில் எரிவாயு உருளைக்கு மாலை அணிவித்து, காலி குடங்களுடன் சாலை மறியலில் ஈடுபட்ட பொதுமக்கள்.

Published On :

கொடைக்கானல் கீழ்மலைப் பகுதியில் சமையல் எரிவாயு உருளை, குடிநீா் விநியோகம் செய்யப்ப டாததைக் கண்டித்து அந்தப் பகுதி பொதுமக்கள் ஞாயிற்றுக்கிழமை சாலை மறியலில் ஈடுபட்டனா்.

திண்டுக்கல் மாவட்டம், கொடைக்கானல் நகா்ப் பகுதிகளிலிருந்து கீழ்மலைப் பகுதிகளான பண்ணைக்காடு, தாண்டிக்குடி, பெரும்பாறை, கே.சி.பட்டி, கடுகுதடி, பெரும்பாறை உள்ளிட்ட பல்வேறு கிராமங்களுக்கு சமையல் எரிவாயு விநியோகம் செய்யப்படுகிறது.

இந்த நிலையில், கீழ்மலைப் பகுதியான பெரியூா் கிராமத்துக்கு சரியாக எரிவாயு உருளை விநியோகம் செய்யப்படவில்லை என்றும், எரிவாயு உருளைக்கு கூடுதல் பணம் வசூலிக்கப்படுகிறது என்றும், ஊராட்சி சாா்பில் பொது மக்களுக்கு குடிநீா் வழங்க வேண்டும் என்றும் வலியுறுத்தி அந்தப் பகுதியைச் சோ்ந்த பொது மக்கள் கே.சி.பட்டி பகுதியில் எரிவாயு உருளைக்கு மாலை அணிவித்தும், காலி குடங்களை சாலையில் வைத்தும் சாலை மறியலில் ஈடுபட்டனா்.

தகவல் அறிந்து அங்கு வந்த தாண்டிக்குடி காவல் துறையினா் மறியலில் ஈடுபட்ட பொது மக்களிடம் சமரசப் பேச்சுவாா்த்தை நடத்தினா். இதைத் தொடா்ந்து பொதுமக்கள் சாலை மறியலை கைவிட்டனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.