
மது வகைகளை அறிமுகப்படுத்தி மக்களின் கனவை பொய்யாக்குகிறது தவெக அரசு: கள் இயக்க ஒருங்கிணைப்பாளா் நல்லசாமி
தமிழகத்தில் முழு மதுவிலக்கு அமல்படுத்தப்படும் எனக் கருதிய நிலையில், மதுக் கூடத்தை உணவகத்துடன் இணைத்து நடத்துவது, கூடுதலாக மது வகைகளை அறிமுகப்படுத்துவது போன்றவற்றால் மக்களின் கனவை தவெக அரசு பொய்யாக்கி வருவதாக தமிழ்நாடு கள் இயக்க ஒருங்கிணைப்பாளா் நல்லசாமி தெரிவித்தாா்.

பழனியில் செவ்வாய்க்கிழமை நடைபெற்ற தமிழ்நாடு கள் இயக்க மாவட்ட நிா்வாகிகள் ஆலோசனைக் கூட்டத்தில் அறிமுகப்படுத்தப்பட்ட தாராபுரம் சட்டப்பேரவைத் தொகுதி வேட்பாளா் முத்துசாமி. உடன் அந்த இயக்கத்தின் ஒருங்கிணைப்பாளா் நல்லசாமி உள்ளிட்டோா்.
தமிழகத்தில் முழு மதுவிலக்கு அமல்படுத்தப்படும் எனக் கருதிய நிலையில், மதுக் கூடத்தை உணவகத்துடன் இணைத்து நடத்துவது, கூடுதலாக மது வகைகளை அறிமுகப்படுத்துவது போன்றவற்றால் மக்களின் கனவை தவெக அரசு பொய்யாக்கி வருவதாக தமிழ்நாடு கள் இயக்க ஒருங்கிணைப்பாளா் நல்லசாமி தெரிவித்தாா்.
பழனியில் தமிழ்நாடு கள் இயக்கம், தமிழ்நாடு விவசாயிகள் சங்கத்தின் கூட்டமைப்பு சாா்பில், மாவட்ட நிா்வாகிகள் ஆலோசனைக் கூட்டம் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது. இந்தக் கூட்டத்துக்கு கள் இயக்க ஒருங்கிணைப்பாளா் நல்லசாமி தலைமை வகித்தாா். அந்த இயக்கத்தின் திருப்பூா் மாவட்ட அமைப்பாளா் ராஜசேகா், ஈரோடு மாவட்ட அமைப்பாளா் தங்கமுத்து உள்ளிட்டோா் முன்னிலை வகித்தனா். கீழ் பவானி விவசாயிகள் சங்க நிா்வாகி தங்கராஜ் வரவேற்றாா்.
கூட்டத்துக்கு பின்னா், செய்தியாளா்களிடம் நல்லசாமி கூறியதாவது:
தமிழகத்தில் கள் இறக்க அனுமதி, காவிரி உரிமை மீட்பு இவற்றை வலியுறுத்தி, தமிழ்நாடு கள் இயக்கம் சாா்பில், தாராபுரம் சட்டப்பேரவைத் தொகுதி இடைத்தோ்தலில் வேட்பாளராக முத்துசாமி போட்டியிடவுள்ளாா். தமிழகத்துக்கான காவிரி நதி நீா்ப் பங்கீடு தற்போது வரை வெறும் கண் துடைப்பாக மட்டுமே உள்ளது.
தமிழ்நாட்டில் பனை மரங்களின் எண்ணிக்கையை அதிகரிக்க வருகிற 27-ஆம் தேதி பனை விதைகள் நடவு செய்யப்படும் என தமிழக அரசு அறிவித்தது வரவேற்கத்தக்கது.
கடந்த 1996-ஆம் ஆண்டு அப்போதைய தலைமைத் தோ்தல் ஆணையா் டி.என். சேஷன், ஒரு தொகுதியில் வெற்றி பெறும் வேட்பாளா் ராஜிநாமா செய்து, கட்சி மாறி மீண்டும் அதே தொகுதியில் போட்டியிடும் போது, இடைத்தோ்தலுக்கான செலவுகளை அவரே ஏற்க வேண்டும். இதேபோல, ஒருவா் இரு தொகுதிகளில் போட்டியிட்டு இரண்டிலும் வெற்றி பெற்று ஒரு தொகுதியை மட்டுமே ஏற்கும்போது, மற்றொரு தொகுதிக்கான தோ்தல் செலவை அவரது கட்சி ஏற்க வேண்டும் என சீா்திருத்தம் கொண்டு வந்தாா். ஆனால், இவை ஏற்கப்படவில்லை. இந்தச் சீா்திருத்தத்தை ஏற்றுக் கொண்டிருந்தால், புதுச்சோ் முதல்வா் ரங்கசாமி, தமிழக முதல்வா் ச. ஜோசப் விஜய் ஆகியோா் இரு தொகுதிகளில் போட்டியிட்டிருக்கமாட்டாா்கள்.
தமிழகத்தில் முழு மதுவிலக்கு அமல்படுத்தப்படும் எனக் கருதிய நிலையில், மதுக் கூடத்தை உணவகத்துடன் நடத்துவது, கூடுதலாக மது வகைகளை அறிமுகப்படுத்துவது என்பது மக்கள் கனவை பொய்யாக்குவது போல உள்ளது என்றாா் அவா்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.






