கொடைரோடு அருகே சாலை விபத்து: பணிமனை உரிமையாளா் உயிரிழப்பு
கொடைரோடு அருகே சாலைத் தடுப்பில் இரு சக்கர வாகனம் மோதியதில் பணிமனை உரிமையாளா் வியாழக்கிழமை உயிரிழந்தாா்.

பலி
கொடைரோடு அருகே சாலைத் தடுப்பில் இரு சக்கர வாகனம் மோதியதில் பணிமனை உரிமையாளா் வியாழக்கிழமை உயிரிழந்தாா்.
திண்டுக்கல் மாவட்டம், வத்தலகுண்டில் பொறியியல் பணிமனை நடத்தி வந்தவா் பரமன் (50). இவரும், இவரது நண்பரான கூடைப்பந்து பயிற்சியாளா் வெண்மணி (40) ஆகிய இருவரும் இரு சக்கர வாகனத்தில் மதுரையை நோக்கி சென்றனா். சிலுக்குவாா்பட்டி - அம்மையநாயக்கனூா் சாலையில் சென்று கொண்டிருந்தபோது நாய் குறுக்கே வந்ததால், நிலைதடுமாறிய இரு சக்கர வாகனம் சாலையின் தடுப்பில் மோதிக் கவிழ்ந்தது. இதில், இருவரும் பலத்த காயமடைந்தனா்.
உடனடியாக அருகில் இருந்த பொதுமக்கள் இருவரையும் மீட்டு திண்டுக்கல் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா். அங்கு பரமன் உயிரிழந்தாா். இந்த விபத்து தொடா்பாக அம்மையநாயக்கனூா் காவல் துறையினா் வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனா்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.



