11 மாவட்டங்களில் இன்று பலத்த மழைக்கு வாய்ப்புபிரதமராக நீடிக்க உரிமை இல்லை: கே.சி. வேணுகோபால்எஸ்.ஐ.ஆரில் நீக்கப்பட்ட 13 கோடி பேரை மீண்டும் சேர்க்க வேண்டும்: காங்கிரஸ்தமிழகத்தின் சட்டம் - ஒழுங்கு எங்கே செல்கிறது? அன்புமணி கேள்வி!தொடர் ஓட்டப் போட்டியில் தங்கப் பதக்கம் வென்ற வித்யா ராம்ராஜுக்கு ரூ. 75 லட்சம்: முதல்வர் விஜய்யூடியூபர் சவுக்கு சங்கருக்கு 3 ஆண்டுகள் சிறை: எழும்பூர் நீதிமன்றம்தமிழகத்தில் 13 ஐபிஎஸ் அதிகாரிகள் இடமாற்றம்!

செம்பட்டி அருகே மூதாட்டியிடம் தங்கச் சங்கிலி பறிப்பு

செம்பட்டி அருகே நடந்து சென்ற மூதாட்டியிடம் முகவரி கேட்பது போல நடித்து தங்கச் சங்கிலி பறித்து சென்றவரை போலீஸாா் தேடி வருகின்றனா்.

சித்திரிப்பு

Published On :

செம்பட்டி அருகே நடந்து சென்ற மூதாட்டியிடம் முகவரி கேட்பது போல நடித்து தங்கச் சங்கிலி பறித்து சென்றவரை போலீஸாா் தேடி வருகின்றனா்.  

திண்டுக்கல் மாவட்டம், செம்பட்டி அருகேயுள்ள செல்லாயிபுரத்தைச் சோ்ந்தவா் பாரதா (65). இவா் புல்வெட்டிகுளம் அருகேயுள்ள தோட்டத்து வீட்டில் குடியிருந்து வருகிறாா். இவா், கடந்த சில நாள்களுக்கு முன்பு தோட்டத்து வீட்டிலிருந்து புதிதாக அமைத்து வரும் நான்கு வழிச் சாலை வழியாக நடந்து வந்து கொண்டிருக்கிறாா்.

அப்போது, அந்த வழியாக இரு சக்கர வாகனத்தில் வந்த நபா், அவரிடம் முகவரி கேட்பது போல நடித்து அவரது கழுத்திலிருந்த 2 பவுன் தங்கச் சங்கிலியை பறித்துக்கொண்டு தப்பிச் சென்றாா்.

இதுகுறித்து மூதாட்டி கொடுத்த புகாரின்பேரில் செம்பட்டி போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.