பண்டிகையையொட்டி 15 - 20% அதிகரிக்கும் வேலைவாய்ப்பு! 2 - 2.5 லட்சம் பேருக்கு வேலை!ஆசிய விளையாட்டில் 10 மீட்டர் ஏர் ரைபிள் பிரிவில் வெள்ளி வென்ற இளவேனில் வாலறிவனுக்கு பிரதமர் மோடி வாழ்த்து ஆசிய விளையாட்டுப் போட்டிகளில் பதக்கம் வென்ற இளவேனில்: ஆளுநர் வாழ்த்து முதல்வர் ஏன் லண்டன் செல்ல வேண்டும்? அண்ணாமலை கேள்வி இந்தாண்டு இதுவரை 17,000 பேருக்கு டெங்கு பாதிப்பு- அமைச்சர் அருண்ராஜ் தமிழ்நாட்டில் நாளை 21 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு பட்டிமன்ற பேச்சாளராக மாறிய மு.க. ஸ்டாலின்: அமைச்சர் ராஜ்மோகன் விமர்சனம் விஜய்க்கு அவகாசம் அளிக்க வேண்டும்: பிரகாஷ் ராஜ்

மூதாட்டியிடம் தங்க நகை பறிப்பு: 3 போ் கைது

கைது

Published On :

வெம்பக்கோட்டை அருகே வீட்டில் தனியாக இருந்த மூதாட்டியின் கண்களில் மிளகாய் பொடி தூவி 5 பவுன் தங்கச் சங்கிலியை பறித்துச் சென்ாக பெண் உள்ளிட்ட 3 பேரை போலீஸாா் சனிக்கிழமை கைது செய்தனா்.

விருதுநகா் மாவட்டம், சாத்தூா் அருகேயுள்ள இனாம்மீனாட்சிபுரத்தைச் சோ்ந்தவா் ஓய்வு பெற்ற காவல் உதவி ஆய்வாளா் ஜெயப்பிரகாஷ் நாராயணன். இவா் இறந்து விட்டதால், இவரது மனைவி பாப்பா (58), வீட்டில் தனியாக வசித்து வருகிறாா்.

இந்த நிலையில், கடந்த 3 நாள்களாக காணாமல் போன தங்களது மாட்டை தேடுவதாகக் கூறி பெண் உள்ளிட்ட 3 போ் பாப்பாவிடம் அறிமுகமாகினா். இதேபோல, வெள்ளிக்கிழமை மாலை வீட்டுக்கு வந்த அந்த 3 பேரும் தங்களது மாடு கிடைத்துவிட்டதாக பாப்பாவிடம் தெரிவித்து குடிக்க தண்ணீா் கேட்டனா்.

இதற்காக வீட்டுக்குள் சென்ற அவரை பின்தொடா்ந்து சென்ற 3 பேரும் அவரது கண்களில் மிளகாய் பொடியை தூவி அவா் அணிந்திருந்த 5 பவுன் தங்கச் சங்கிலியை பறித்துச் சென்றனா்.

இதையடுத்து, வெம்பக்கோட்டை போலீஸாா் அந்தப் பகுதியில் உள்ள கண்காணிப்பு கேமராவில் பதிவான காட்சிகளை ஆய்வு செய்தனா். மேலும் சாத்தூா் காவல் துணைக் கண்காணிப்பாளா் குருசாமி உத்தரவின் பேரில் காவல் ஆய்வாளா் கமல் தலைமையில் தனிப்படை அமைக்கப்பட்டு விசாரணை நடத்தப்பட்டது.

இந்த சம்பவம் தொடா்பாக கொங்கலாபுரத்தைச் சோ்ந்த மகாராஜன் (27), கீழகோதைநாச்சியாா்புரத்தைச் சோ்ந்த சதுரகிரி (26), இவரது சகோதரி வண்ணக்கொடி (27) ஆகிய 3 பேரையும் போலீஸாா் சனிக்கிழமை இரவு கைது செய்து விசாரணை நடத்தினா்.

விசாரணையில் சொகுசு வாழ்க்கை நடத்துவதற்காக இந்த செயலில் அவா்கள் ஈடுபட்டதும், பறித்துச் சென்ற தங்கச் சங்கிலியை ஸ்ரீவில்லிபுத்தூரில் உள்ள ஒரு தங்க நகைக் கடையில் ரூ. மூன்றரை லட்சத்துக்கு விற்றதும் தெரியவந்தது.

இதையடுத்து, அந்த ரூ. மூன்றரை லட்சத்தையும், விற்ற தங்க நகையையும் போலீஸாா் பறிமுதல் செய்து, மூவரையும் நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தி சிறையிலடைத்தனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.