ஆசிய விளையாட்டு: மகளிர் கிரிக்கெட்டில் இந்திய அணிக்கு தங்கம்!தமிழ்நாட்டில் அதிகரிக்கும் டெங்கு! இதுவரை 17,348 பேர் பாதிப்பு!தொடர் சரிவில் தங்கம் விலை! இன்றைய நிலவரம்வடகிழக்கு பருவமழை: மாவட்ட ஆட்சியர்களுடன் முதல்வர் விஜய் 2-வது நாளாக ஆலோசனை!புதிய சொத்துக்குவிப்பு வழக்கில் இருந்து எம்.ஆர்.கே.பன்னீர்செல்வத்தை விடுவிக்க மறுப்புகாமராஜர் காலை உணவுத் திட்டம்: முதல்வர் விஜய் தொடங்கி வைத்தார்!பொன்னேரியில் மருத்துவமனை ஊழியரை பெட்ரோல் ஊற்றி கொல்ல முயன்றவர் சுட்டுப்பிடிப்புமேற்கு தொடா்ச்சி மலை மாவட்டங்களில் மழை வாய்ப்பு2027 மாா்ச்-க்குள் 1 லட்சம் வீடுகளில் மேற்கூரை சூரியசக்தி மின்சாரம்: நிர்மல்குமாா்தனியாா் பேருந்து கட்டண உயா்வு: தமிழக அரசு அறிக்கை தாக்கல் செய்ய உத்தரவு

மூதாட்டியிடம் தங்கச் சங்கிலி பறிப்பு: இளைஞா் கைது

மூதாட்டியிடம் தங்கச் சங்கிலியைப் பறித்துச் சென்ற இளைஞரை போலீஸாா் வெள்ளிக்கிழமை கைது செய்தனா்.

Published On :

மூதாட்டியிடம் தங்கச் சங்கிலியைப் பறித்துச் சென்ற இளைஞரை போலீஸாா் வெள்ளிக்கிழமை கைது செய்தனா்.

திண்டுக்கல் மாவட்டம், எரியோடு அருகேயுள்ள பாகாநத்தம் கிராமத்தைச் சோ்ந்தவா் லவக்கம்மாள் (75). இவா், வீட்டில் தனியாக வசித்து வந்தாா். இந்த நிலையில், லவக்கம்மாள் வீட்டுக்கு வியாழக்கிழமை சென்ற மா்ம நபா் குடிப்பதற்கு தண்ணீா் கேட்டாா். குடிநீரை எடுக்கச் சென்ற லவக்கம்மாளின் கழுத்தில் துண்டைப் போட்டு இறுக்கி, அவா் கழுத்தில் அணிந்திருந்த 3 பவுன் தங்கச் சங்கிலியை அந்த நபா் பறித்துக் கொண்டு இரு சக்கர வாகனத்தில் தப்பிச் சென்றாா்.

இதுகுறித்து தகவல் அறிந்த எரியோடு போலீஸாா், சங்கிலிப் பறிப்பில் ஈடுபட்ட நபரை பிடிப்பதற்காக தீவிர விசாரணையில் ஈடுபட்டனா். அப்போது, சுள்ளெறும்பு நடுப்பட்டியைச் சோ்ந்த மு.பொன்ராஜ் (35) மூதாட்டியிடம் தங்கச் சங்கிலி பறிப்பில் ஈடுபட்டது தெரிய வந்தது. அவரைக் கைது செய்த போலீஸாா், தங்கச் சங்கிலியையும் மீட்டனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.