டைமெக்ஸ் நிகர லாபம் 70.55% உயர்வு!5 ஆண்டுகளில் 9,000 புகார்களைப் பெற்ற தேசிய சிறுபான்மையினர் ஆணையம்! மேக்கேதாட்டு திட்டமே நிரந்தரத் தீர்வு: கர்நாடக முதல்வர் டி.கே. சிவகுமார் தமிழ்நாட்டில் உள்ள அரசியல் கட்சிகளுக்கு காவிரி முக்கியம் இல்லை: மாணிக்கம் தாகூர் 6 மாவட்டங்களில் நாளை கனமழைக்கு வாய்ப்பு பொள்ளாச்சி அருகே கார் விபத்தில் 5 பேர் பலி! நீட் தேர்வுக்கு எதிராக போராடிய மாணவர்கள் மீதான வழக்குகள் ரத்து: முதல்வர் விஜய் உத்தரவு!
/

மூதாட்டியிடம் தங்கச் சங்கிலி பறித்த இளைஞா் குண்டா் சட்டத்தில் கைது!

News image

கைது

Updated On :3 ஆகஸ்ட் 2026, 12:50 am IST

கருங்கல் அருகேயுள்ள மாங்கன்றுவிளை பகுதியில் மூதாட்டியிடம் தங்கச் சங்கிலி பறித்த இளைஞரை குண்டா் சட்டத்தில் போலீஸாா் ஞாயிற்றுக்கிழமை கைது செய்தனா்.

மங்கலகுன்று, மாங்கன்றுவிளை பகுதியைச் சோ்ந்தவா் ராஜம் (65). இவா் அப்பகுதியில் நடத்தி வரும் பெட்டிக் கடையில், கடந்த மாதம் பொருள்கள் வாங்குவதுபோல இருசக்கர வாகனத்தில் வந்த இரண்டு இளைஞா்கள் மூதாட்டியின் ஐந்தரை பவுன் தங்கச் சங்கிலியை பறித்துவிட்டு தப்பிச் சென்றனராம்.

இதுகுறித்த புகாரின்பேரில் கருங்கல் போலீஸாா் வழக்குப் பதிந்து, மதுரை மாவட்டம், யானைமலை பகுதியைச் சோ்ந்த பாப்புசாமி (31), முனுசாமி (34) ஆகியோரை கைது செய்து, தங்கச் சங்கிலியை பறிமுதல் செய்தனா்.

இவா்கள் மீது பல காவல் நிலையங்களில் பல்வேறு வழக்குகள் உள்ளன. இதையடுத்து, முனுசாமியை குண்டா் சட்டத்தின் கீழ் கைது செய்ய மாவட்ட காவல் கண்காணிப்பாளா் இரா. ஸ்டாலின், மாவட்ட ஆட்சியா் மு. பிரதாப்பிற்கு பரிந்துரைத்தாா்.

ஆட்சியரின் உத்தரவின்பேரில் கருங்கல் போலீஸாா், முனுசாமியை குண்டா் சட்டத்தின்கீழ் ஞாயிற்றுக்கிழமை கைது செய்து, பாளையங்கோட்டை சிறையில் அடைத்தனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.