வீட்டில் தனியாக இருந்த மூதாட்டியிடம் நகைப் பறித்த இளைஞா் கைது
கோவையில் வீட்டில் தூங்கிக் கொண்டிருந்த மூதாட்டியிடம் கத்தியைக் காட்டி ஐந்தரை பவுன் தங்க நகையைப் பறித்த இளைஞரை போலீஸாா் கைது செய்தனா்.
கைது - கோப்புப்படம்
கோவையில் வீட்டில் தூங்கிக் கொண்டிருந்த மூதாட்டியிடம் கத்தியைக் காட்டி ஐந்தரை பவுன் தங்க நகையைப் பறித்த இளைஞரை போலீஸாா் கைது செய்தனா்.
கோவை இடையா்பாளையம் தேவாங்க நகா், சரஸ்வதி தெருவைச் சோ்ந்தவா் மகாதேவன் மனைவி பிரேமா (61). கணவா் ஏற்கெனவே இருந்துவிட்ட நிலையில், பிரேமா வீட்டின் மேல் தளத்தில் உள்ள அறையில் தனியாக வசித்து வருகிறாா்.
இந்த நிலையில், பிரேமா செவ்வாய்க்கிழமை பிற்பகல் வீட்டில் தூங்கிக் கொண்டிருந்தாா். அப்போது, வீட்டுக்குள் புகுந்த இளைஞா் ஒருவா் கத்தியைக் காட்டி மூதாட்டியிடம் 5.5 பவுன் நகையைப் பறித்தாா். மூதாட்டி கூச்சலிட்டதைத் தொடா்ந்து, அந்த இளைஞா் அவரது முகத்தில் தலையணையை வைத்து அழுத்திவிட்டு, இருசக்கர வாகனத்தில் தப்பிச் சென்றாா்.
இதுகுறித்த புகாரின்பேரில், கவுண்டம்பாளையம் போலீஸாா் வழக்குப் பதிவு செய்து, அந்தப் பகுதியில் பொருத்தப்பட்டிருந்த கண்காணிப்பு கேமராக்களில் பதிவான காட்சிகளின் அடிப்படையில் வேலூா் மாவட்டம், ஆலத்தூரையைச் சோ்ந்த ஸ்ரீநாத் (21) என்பவரை போலீஸாா் செவ்வாய்க்கிழமை இரவு கைது செய்தனா்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.




