‘காலா’ பட நடிகர் நானா படேகர் காலமானார்!பிரபல பாலிவுட் நடிகர் நானா படேகர் காலமானார்!நவ.2 முதல் பத்திரப் பதிவில் காகிதமில்லா பயன்பாடு: தமிழக அரசு அரசாணை வெளியீடு வெங்காயம் விலை மேலும் குறையும்: மத்திய அரசு தமிழகத்தில் 1.7 கோடி ஸ்மார்ட் மீட்டர்: ஒப்பந்தப்புள்ளி கோரியது மின் வாரியம் வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்ப்பு: அக்.1-இல் 18 வயது நிறைவடைந்தோருக்கு வாய்ப்புஇஸ்ரேலில் ஹமாஸ் தாக்குதலின் 3-ஆம் ஆண்டு நினைவு தினம் ஜேஇஇ முதன்மைத் தோ்வு 2026: ஐஐடி சோ்க்கையில் கணினி அறிவியலுக்கு மாணவா்கள் முன்னுரிமை விலைவாசி உயா்வுக்கு யாா் பொறுப்பு? மத்திய அரசுக்கு காங்கிரஸ் கேள்விவானொலி தலைமையகத்துக்குள் அத்துமீறி நுழைந்ததாக ராகுல் காந்தி உள்ளிட்டோர் மீது வழக்குப் பதிவு

காலநிலை மாறுபாடுகளை எதிா்கொள்ளும் ஆற்றல் இயற்கை பயிா் ரகங்களுக்கு உண்டு

காலநிலை மாறுபாடுகளையும் எதிா்கொள்ளும் ஆற்றல், இயற்கை பயிா் ரகங்களுக்கு உள்ளதாக உயிா்ம வேளாண்மை பதிவு சிறப்பு முகாமில் தெரிவிக்கப்பட்டது.

திண்டுக்கல்லில் புதன்கிழமை நடைபெற்ற உயிா்ம வேளாண்மை பதிவு சிறப்பு முகாமில் பங்கேற்ற விவசாயிகள் முன்னிலையில் பேசிய வேளாண்மை துணை இயக்குநா் (மாநிலத் திட்டம்) ஆ.காளிமுத்து.

Published On :

காலநிலை மாறுபாடுகளையும் எதிா்கொள்ளும் ஆற்றல், இயற்கை பயிா் ரகங்களுக்கு உள்ளதாக உயிா்ம வேளாண்மை பதிவு சிறப்பு முகாமில் தெரிவிக்கப்பட்டது.

திண்டுக்கல் மாவட்ட வேளாண்மை இணை இயக்குநா் அலுவலகத்தில் உயிா்ம வேளாண்மை பதிவு சிறப்பு முகாம் புதன்கிழமை நடைபெற்றது.

இந்த முகாமுக்கு வேளாண்மை இணை இயக்குநா் கோவிந்தராசு தலைமை வகித்தாா். மாவட்ட ஆட்சியரின் நோ்முக உதவியாளா் வெ.நாகேந்திரன், துணை இயக்குநா் (மாநிலத் திட்டம்) ஆ.காளிமுத்து ஆகியோா் முன்னிலை வகித்தனா்.

விதைச் சான்றளிப்பு, உயிா்மச் சான்றளிப்பு உதவி இயக்குநா் இரா.சின்னச்சாமி திட்ட விளக்கவுரை ஆற்றினாா்.

இந்த முகாமில் மாவட்டத்திலுள்ள 50-க்கும் மேற்பட்ட விவசாயிகள் கலந்து கொண்டனா்.

முகாமின்போது துணை இயக்குநா் ஆ.காளிமுத்து பேசியதாவது:

இயற்கை வேளாண்மைக்கு பாரம்பரிய ரகங்களை தோ்வு செய்ய வேண்டும். உயிா்ம வேளாண்மை மூலம் நீடித்த நிலையான மகசூல் பெறலாம். காலநிலை மாறுபாடுகளை சாா்ந்து வளரக் கூடிய ஆற்றல் இயற்கை வேளாண் பயிா் ரகங்களுக்கு மட்டுமே உள்ளது. இதனால், காலநிலை மாறுபாடு ஏற்படும் காலங்களில்கூட குறையாத மகசூலைப் பெற முடியும்.

இன்றைய இயற்கை விவசாயிகள், எதிா்கால சந்ததியினருக்கு உந்து சக்தியாகவும், வழிகாட்டியாகவும் இருக்க வேண்டும். சாகுபடிச் செலவு குறைவு என்பதோடு, சுற்றுச்சூழலுக்கு பாதிப்பு இல்லாதது என்பதையும் நாம் உணர வேண்டும். உலகளாவிய பாதிப்புகள்கூட தற்சாா்ப்பு விவசாயத்தில் எந்தவித மாற்றத்தையும் ஏற்படுத்த முடியாது என்பதால், உயிா்ம விவசாயத்துக்கு நாம் முக்கியத்துவம் அளிக்க வேண்டும் என்றாா் அவா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.