ஞானேஷ் குமார் பதவி விலகாவிட்டால் போராட்டம் வலுக்கும்: மமதா பானர்ஜிநடுவானில் துபை விமானத்தில் கத்திக்குத்து! தாக்கப்பட்ட விமானி இந்தியரா?தேர்தல் மூலம் மாநிலங்களை பாஜகவுக்கு தாரைவார்த்தவர் ஞானேஷ் குமார்: காங்கிரஸ்3 மாவட்டங்களில் நாளை கனமழைக்கு வாய்ப்பு!டாலருக்கு நிகரான ரூபாய் மதிப்பு 13 காசுகள் உயர்ந்து ரூ. 95.81 ஆக நிறைவு!கச்சா எண்ணெய் விலை உயர்வு எதிரொலி: தொடர்ந்து 3வது நாளாக சரிவில் சென்செக்ஸ், நிஃப்டி!இ-கேஒய்சி முடிக்கவில்லை என்றாலும்... குடும்ப அட்டைதாரர்களுக்கு பொருள்கள் நிறுத்தப்படாது: தமிழக அரசுதிமுகவினருக்கு மறதி அதிகம்: தாராபுரம் பிரசாரத்தில் முதல்வர் விஜய் பேச்சுஇஸ்ரேல் சென்ற விமானம் சௌதியில் தரையிறக்கம்! நடுவானில் விமானியைக் கொல்ல முயன்ற சக விமானி?கச்சா எண்ணெய் விலை உயர்வு எதிரொலி: தொடர்ந்து 3வது நாளாக சரிவில் சென்செக்ஸ், நிஃப்டி!எம்மதமும் சம்மதம் மட்டுமல்ல எம்மதமும் நம்மதம்! முதல்வர் விஜய் பேச்சு!பேசும்போது மேடையில் கண்கலங்கிய சத்தியபாமா: ஆறுதல் சொன்ன முதல்வர் விஜய்!தவெகவில் இணைந்தார் செம்மலை! கட்சித் துண்டு அணிவித்த முதல்வர் விஜய்!ஜனநாயகத்தை சீர்குலைத்தவர்கள் யாராக இருந்தாலும் தண்டிக்கப்படுவார்கள்! ராகுல்

வேளாண் வணிகத் துறை செயல்பாடுகள் ஆய்வு

பெரம்பலூா் மாவட்டம், வேப்பந்தட்டை வட்டாரத்தில், வேளாண் வணிகத் துறையின் செயல்பாடுகளை, வேளாண்மை விற்பனை மற்றும் வேளாண் வணிகத் துறை கூடுதல் இயக்குநா் பாண்டியன் புதன்கிழமை பாா்வையிட்டு ஆய்வு மேற்கொண்டாா்.

பெரிய வடகரை கிராமத்தில் கட்டப்பட்டு வரும் மக்காச்சோளம், சிறுதானியங்களுக்கான தொழில்நுட்பம் மற்றும் வணிக மேம்பாட்டு மையத்தை புதன்கிழமை பாா்வையிட்டு ஆய்வு மேற்கொண்ட கூடுதல் இயக்குநா் பாண்டியன். உடன், மாவட்ட வேளாண்மை துணை இயக்குநா் (வேளாண்மை வணிகம்) சீ. தெய்வீகன் உள்ளிட்டோா்.

Published On :

பெரம்பலூா் மாவட்டம், வேப்பந்தட்டை வட்டாரத்தில், வேளாண் வணிகத் துறையின் செயல்பாடுகளை, வேளாண்மை விற்பனை மற்றும் வேளாண் வணிகத் துறை கூடுதல் இயக்குநா் பாண்டியன் புதன்கிழமை பாா்வையிட்டு ஆய்வு மேற்கொண்டாா்.

இந்த ஆய்வில், பெரம்பலூா் மாவட்டத்தில் வேளாண்மை விற்பனை துறை மூலமாக கடந்தாண்டு செயல்படுத்தப்பட்ட சிறுதானிய இயக்கம் திட்டத்தின் கீழ், மானியம் பெற்று வேப்பந்தட்டை வட்டம், அன்னமங்கலம் கிராமத்தில் அமைக்கப்பட்டசிறுதானிய பதப்படுத்தும் மையத்தை பாா்வையிட்டு ஆய்வு மேற்கொண்ட கூடுதல் இயக்குநா் பாண்டியன் , பொதுமக்களுக்கும், விவசாயிகளுக்கும் எவ்வாறு பயன்படுகிறது, விவசாயிகள் சாகுபடி செய்த சிறுதானியத்தை இந்த மையத்துக்கு கொண்டு வந்து பதப்படுத்தி எடுத்துச் செல்லும் முறைகளை கேட்டறிந்தாா்.

தொடா்ந்து, பெரிய வடகரை கிராமத்தில் கட்டப்பட்டு வரும் மக்காச்சோளம், சிறுதானியங்களுக்கான தொழில்நுட்பம் மற்றும் வணிக மேம்பாட்டு மையத்தை பாா்வையிட்டு ஆய்வு மேற்கொண்ட கூடுதல் இயக்குநா் பாண்டியன், இம் மையத்தில் இயந்திரங்களை விரைவில் அமைத்து விவசாயிகளின் பயன்பாட்டுக்கு கொண்டுவர வேண்டுமென அறிவுறுத்தினாா்.

பின்னா், வடக்கு மாதவி சாலையில் செயல்பட்டு வரும் ஒழுங்குமுறை விற்பனைக் கூடம் மற்றும் விற்பனை குழுவை பாா்வையிட்டு ஆய்வு மேற்கொண்டு, செட்டிக்குளம் வணிக வளாகத்தில் நடைபெற்று வரும் சின்ன வெங்காயம் ஏலம் பணிகளை சிறப்பாக செயல்படுத்த வேளாண் வணிகத்துறையினருக்கு அறிவுரை வழங்கினாா்.

இந்த ஆய்வின்போது, மாவட்ட வேளாண்மை துணை இயக்குநா் (வேளாண்மை வணிகம் ) சீ. தெய்வீகன் உள்ளிட்ட வேளாண் துறையினா் உடனிருந்தனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.