பதவி உயர்வு வேண்டுமா? அக்செஞ்சர் தலைமை செயல் நிர்வாகி சொல்வது என்ன?உணவகங்கள், டீக்கடைகளுக்கு மின்சார மானியம்: தமிழக அரசின் அதிரடி அறிவிப்புசிலிண்டர் தட்டுப்பாடு! தமிழக அரசின் முக்கிய அறிவிப்புகள் என்னென்ன?விளம்பர வெறிக்கு சிறுவர்களா? வெட்கமாக இல்லையா? அண்ணாமலை கேள்வி! ஈரான் தாக்குதலில் 5 அமெரிக்க டேங்கர் விமானங்கள் சேதம்!தங்கம், வெள்ளி விலை அதிரடி குறைவு! வேளச்சேரி - பரங்கிமலை ரயில் சேவை தொடங்கியது! வீடுகளுக்கு சமையல் எரிவாயு சிலிண்டா் தடையற்ற விநியோகம்: மத்திய அரசு மீண்டும் உறுதி
/

ரூ. 8 லட்சம் மோசடி: திமுக பிரமுகருக்கு ஜாமீன் மறுப்பு

வேலை வாங்கித் தருவதாக ரூ. 8 லட்சம் மோசடி செய்ததாக கைது  செய்யப்பட்ட திமுக பிரமுகர் ஒச்சுபாலுவுக்கு ஜாமீன் மறுக்கப்பட்டது.

News image
Updated On :5 ஜனவரி 2013, 8:08 pm

தினமணி

வேலை வாங்கித் தருவதாக ரூ. 8 லட்சம் மோசடி செய்ததாக கைது  செய்யப்பட்ட திமுக பிரமுகர் ஒச்சுபாலுவுக்கு ஜாமீன் மறுக்கப்பட்டது.

 மதுரை 3-ம் பகுதி திமுக செயலர் ஒச்சுபாலு.

 சிவகங்கை மாவட்டம், கீழடியைச்  சேர்ந்த சுப்பிரமணி என்பவரின் மகனுக்கு வேலை வாங்கித் தருவதாகக் கூறி, ரூ. 8 லட்சம் மோசடி செய்ததாக ஒச்சுபாலுவை, மதுரை எஸ்.எஸ். காலனி போலீஸார் கைது செய்தனர்.

  மோசடி செய்தல், கொலை மிரட்டல் விடுத்தல் ஆகிய பிரிவுகளின்கீழ் அவர் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டது. 

  மேலும் கொடுத்த பணத்தை திருப்பிக் கேட்டபோது ஜாதியைச் சொல்லி திட்டியதாக ஒச்சுபாலு மீது தீண்டாமை சட்டப் பிரிவிலும் வழக்குப் பதிவு செய்யப்பட்டு இருந்தது.

 இந்த நிலையில் தனக்கு ஜாமீன் வழங்குமாறு, மதுரை தீண்டாமை ஒழிப்பு சிறப்பு நீதிமன்றத்தில் ஒச்சுபாலு சார்பில் மனுத் தாக்கல் செய்யப்பட்டு இருந்தது.

 இந்த மனு, நீதிபதி சரவணன் முன்பாக விசாரிக்கப்பட்டது.

 அப்போது, அரசுத் தரப்பில் ஆஜரான வழக்குரைஞர் பாலசண்முகம், ஒச்சுபாலுவை விடுவித்தால் அவர் சாட்சிகளை கலைத்துவிடக்கூடும் என்றார்.

 இதைத் தொடர்ந்து, ஒச்சுபாலுவின் ஜாமீன் மனுவை நீதிபதி தள்ளுபடி செய்தார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.