ட்விஷா சா்மா மரணம்: உச்ச நீதிமன்றம் தாமாக முன்வந்து இன்று விசாரணைஎபோலா பாதிப்பு நாடுகளுக்கு தேவையற்ற பயணம் வேண்டாம்: மத்திய அரசு அறிவுறுத்தல்தமிழ்நாட்டில் 19 மாவட்டங்களுக்கு இன்று பலத்த மழைக்கான ‘மஞ்சள்’ எச்சரிக்கை!சட்டவிரோத குடியேறிகளை அடைத்து வைக்க மையங்கள்: மேற்கு வங்க அரசு உத்தரவு ரயில் நிலையங்களில் கஞ்சா கடத்தலை தடுக்க சிறப்புக் குழுஜூன் முதல் வாரத்தில் ‘இண்டி’ கூட்டணித் தலைவா்கள் சந்திப்பு: மம்தா
/

விலையை கேட்டாலே கண்ணீரை வரவழைக்கும் வெங்காயம்

மதுரை மாவட்டம், மேலூர் தினசரி சந்தையில் வெங்காயத்தின் விலையைக் கேட்டாலே கண்ணிலிருந்து நீரை வரவழைக்கும் அளவுக்கு உயர்ந்து வருகிறது.

Updated On :13 மே 2013, 12:07 am IST

மதுரை மாவட்டம், மேலூர் தினசரி சந்தையில் வெங்காயத்தின் விலையைக் கேட்டாலே கண்ணிலிருந்து நீரை வரவழைக்கும் அளவுக்கு உயர்ந்து வருகிறது.

  15 நாள்களுக்கு முன், சின்ன வெங்காயத்தின் விலை கிலோ ரூ. 25 ஆக இருந்தது. அதன்பின்னர், கொஞ்சம் கொஞ்சமாக உயர்ந்து, தற்போது கிலோ 60 ரூபாயாக உள்ளது. மதுரை, ஒட்டன்சத்திரம் ஆகிய இடங்களிலிருந்து மேலூர் தினசரி காய்கறி சந்தைக்கு 7 முதல் 10 மினி லாரிகளில் காய்கறிகள் கொண்டு வரப்படுகின்றன.

 இந்நிலையில், கடந்த சில தினங்களாக மேலூர் சந்தையில் காய்கறிகளின் விலை  அதிகரித்துக் கொண்டே வருகிறது.

  காரட், பீன்ஸ் விலை கிலோ ரூ. 80 ஆகவும், கிலோ ரூ. 10-க்கு விற்பனையான தக்காளி ரூ. 40 ஆகவும் அதிகரித்துவிட்டது. தற்போது, டீசல் விலை உயர்வு காரணமாகவும், வரத்து குறைவாக உள்ளதாலும், வெங்காயம் மற்றும் காய்கறிகளின் விலை மேலும் உயரக்கூடும் என்கின்றனர் வியாபாரிகள்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.