யூடியூபிலும் பிரதமா் மோடி புதிய சாதனை! 3 கோடி போ் பின்தொடரும் ஒரே அரசியல் தலைவா்பத்தாம் வகுப்பு பொதுத் தோ்வு: தோ்வுக்கூட அனுமதிச் சீட்டு இன்று வெளியீடுஇந்தியாவிடம் போதிய அளவு கச்சா எண்ணெய் கையிருப்பு: மத்திய அமைச்சா் ஹா்தீப் சிங் புரிஇன்று முதல் அரையிறுதி ஆட்டம் - தென்னாப்பிரிக்காவுடன் மோதும் நியூஸிலாந்துமேற்காசியாவிலிருந்து இந்தியா்களை மீட்க இன்று 58 விமானங்கள் இயக்கம்: மத்திய அரசு நாளை வேளச்சேரி - பரங்கிமலை பறக்கும் ரயில் சோதனை ஓட்டம்
/

இரண்டாம் நிலை காவலர்கள் பயிற்சி வகுப்பு தொடக்கம்

மதுரை மாவட்ட தாற்காலிகப் பயிற்சி பள்ளியில் இரண்டாம் நிலைக் காவலர்களுக்கான பயிற்சி வகுப்புகள் புதன்கிழமை தொடங்கின.

News image
Updated On :2 நவம்பர் 2017, 2:54 am

DIN

மதுரை மாவட்ட தாற்காலிகப் பயிற்சி பள்ளியில் இரண்டாம் நிலைக் காவலர்களுக்கான பயிற்சி வகுப்புகள் புதன்கிழமை தொடங்கின.
    இது தொடர்பாக மதுரை ஊரகக் காவல்துறை கண்காணிப்பாளர்அலுவலகம் விடுத்துள்ள செய்திக் குறிப்பு:
    தமிழ்நாடு சீருடைப் பணியாளர் தேர்வாணையத்தின் மூலம் இரண்டாம் நிலைக் காவலர்கள், சிறைக் காவலர்கள் மற்றும் தீயணைப்புக் காவலர்கள் ஆகிய பணியிடங்களுக்கு தேர்வு நடத்தப்பட்டது.
இதில், தேர்வான இரண்டாம் நிலைக் காவலர்கள்(ஆண்கள்) 350 பேருக்கு, 6 மாத கால அடிப்படை பயிற்சி வகுப்பு புதன்கிழமை தொடங்கியது.
 மதுரை மாவட்ட ஆயுதப்படையில் உள்ள தாற்காலிக காவலர் பயிற்சி பள்ளியில் நடைபெற்ற தொடக்க விழாவில், ஊரகக் காவல் கண்காணிப்பாளரும், காவலர் பயிற்சி பள்ளியின் முதல்வருமான என். மணிவண்ணன் பங்கேற்று காவலர்களுக்கு அறிவுரை வழங்கினார்.
இப்பயிற்சியில், காவலர்களுக்கு உடற்பயிற்சி, கவாத்து, ஆயுதங்களை கையாளுதல், துப்பாக்கிச்சுடுதல், சட்ட அறிவு உள்ளிட்ட பயிற்சிகள் அளிக்கப்பட உள்ளன.
    நிகழ்ச்சியில், பயிற்சி பள்ளி துணை முதல்வர் கலாவதி,  துணைக் கண்காணிப்பாளர் முருகன் உள்ளிட்ட அதிகாரிகள் பங்கேற்றனர்.
இதேபோல், மதுரை மாவட்டம் திருவாதவூர் அருகே இடையப்பட்டியில் உள்ள காவலர் பயிற்சிப் பள்ளியில் 450 இரண்டாம் நிலைக் காவலர்களுக்கும் (ஆண்கள்) பயிற்சி வகுப்புகள் புதன்கிழமை தொடங்கியுள்ளன.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.