திருப்பரங்குன்றத்தில் சந்தனக்கூடு திருவிழா புதன்கிழமை இரவு தொடங்கி வியாழக்கிழமை அதிகாலை வரை நடைபெற்றது.
திருப்பரங்குன்றம் மலையில் உள்ள சுல்தான் சிக்கந்தர் பாதுஷா அவுலியா தர்காவில் இவ்விழா கடந்த மார்ச் 19-ஆம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது.
விழாவின் முக்கிய நிகழ்ச்சியான சந்தனக்கூடு விழா புதன்கிழமை இரவு தொடங்கி வியாழக்கிழமை அதிகாலை வரை நடைபெற்றது. விழாவினையொட்டி சுமார் 25 அடி உயரத்தில் மின் விளக்குகளால் சந்தனக்கூடு அலங்கரிக்கப்பட்டது.
அதில், சந்தனம் நிரப்பப்பட்ட செம்புடன் நகரின் முக்கிய வீதிகளில் சந்தனக்கூடு சுற்றி வந்தது. இதில் ஏராளமான இஸ்லாமியர்கள் பங்கேற்றனர். பின்னர் மலை மீதுள்ள தர்காவுக்கு சென்று வழிபாடு நடத்தி, சந்தனம் பூசிக்கொள்ளப்பட்டது.
இவ்விழாவில் கோவை, திருச்சி, சிவகாசி, விருதுநகர் உள்ளிட்ட பகுதியை சேர்ந்த இஸ்லாமியர்கள் ஏராளமனோர் பங்கேற்றனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

முதல்வராக முதல் அரசு விழா! அணிவகுப்பு மரியாதையை ஏற்றார் முதல்வர் விஜய்!

டெஸ்ட் கிரிக்கெட்தான் எனக்கு எல்லாமே; மனம் திறந்த மானவ் சுதர்!

சிங்கப்பெண் அதிரடிப்படை! 2500 புதிய பணியிடங்கள் உருவாக்கப்படும் : முதல்வர் விஜய்

இன்றைய செய்திகள் ஜூன் 9 - நேரலை!
விடியோக்கள்

தவெகவுக்கான ஆதரவு செல்லும்! அதிமுக எம்எல்ஏக்கள் தகுதிநீக்கம் இல்லை! பேரவைத் தலைவர் பேட்டி

Podacst | இண்டியா கூட்டணியைக் கரை சேர்க்குமா காங்கிரஸ்? | News and Views | Epi - 44 |

கோயில்களில் தரிசனத்திற்கு இனி ஆன்லைன் முன்பதிவு! - அமைச்சர் ரமேஷ் | TVK | Online booking


