மதுரை மாநகராட்சியில் வரும் 9-ஆம் தேதி (திங்கள்கிழமை) முதல் நான்கு நாள்களுக்கு ஒரு முறையே குடிநீர் விநியோகிக்கப்பட உள்ளது.
இதுகுறித்து மாநகராட்சி ஆணையர் அனீஷ்சேகர் புதன்கிழமை விடுத்துள்ள செய்திக்குறிப்பு: மதுரையில் பருவமழை போதிய அளவு பெய்யவில்லை. மேலும், வைகை அணையின் நீர் மட்டமும் நாளுக்கு நாள் குறைந்து வருகிறது. ஆகவே மாநகராட்சிப் பகுதியில் குடிநீர் விநியோகத்தை வரும் திங்கள்கிழமை (ஏப்.9) முதல் நான்கு நாள்களுக்கு ஒரு முறை என வழங்க மாநகராட்சி திட்டமிட்டுள்ளது. குடிநீர் குறித்த புகார்களை மாநகராட்சி வார்டுகளின் பொறியாளர்களிடம் தெரிவிக்கலாம்.
குடிநீர் விநியோகம் நடைபெறும் நேரம், பகுதிகள் உள்ளிட்ட விவரம்:
முதல் நாள் (ஏப். 9 ): அருள்தாஸ்புரம் அசோக்நகர், தத்தனேரி கிழக்கு பிரதான சாலை, வயல்வெளி பகுதிகள், பெரியசாமி கோனார் தெரு ஆகியவற்றுக்கு அதிகாலை 3.30 மணி முதல் காலை 6.30 மணி வரை. புகார்களை 9788810194 செல்லிடப்பேசி எண்ணில் கூறலாம்.
ரிசர்வ்லைன் ராஜாஜி தெரு, காமராஜர் தெரு, மூவேந்தர் தெரு, பிபிகுளம், அம்பேத்கர் காலனி, முல்லைநகர், டி.ஆர்.ஓ.காலனி, அண்ணா தெரு, முனியாண்டி கோவில் தெரு ஆகியவற்றில் காலை 6.30 மணி முதல் பிற்பகல் 2.30 மணி வரை. புகார் தெரிவிக்க எண்கள்: 9788810194, 9788810175, 9788810176.
செல்லூர் தாகூர் நகர், பாரதிதாசன்தெரு, அழகாபுரிதெரு, வ.உ.சி.தெரு, மீனாட்சிபுரம், சத்தியமூர்த்தி 1 முதல் 7 தெருக்கள், பூமி உருண்டை தெரு, அய்யனார் கோவில் தெரு, அகிம்சாபுரம், பூந்தமல்லிநகர், ஜீவாதெரு, போஸ் வீதி, செல்லூர் 50 அடி மற்றும் 60 அடிச்சாலைகள், சிவகாமி தெரு, குலமங்கலம் பிரதானசாலை ஆகியவற்றில் பிற்பகல் 2.30 மணி முதல் இரவு 8.30மணி வரை. புகார்- 9788810194, 9788810077 சுந்தரராஜபுரம் பகுதியில் டி.வி.எஸ்.நகர், கோவலன்நகர், முத்துப்பட்டி பகுதிகள், ஆண்டாள்புரம் பழைய மீனாட்சிமில் பகுதிகளில் இரவு 8.30 மணி முதல் நள்ளிரவு 12.30 மணி வரை. புகார்- 9344108334, 9788810085, 9442639596.
கோச்சடை, பெத்தானியபுரம், முத்துநகர், பூஞ்சோலை நகர், டோக் நகர், நடராஜ நகர், இந்திரா நகர், கணேசபுரம், முடக்குச்சாலை, பெத்தானியபுரம், மேட்டுத்தெரு, அண்ணா பிரதான வீதி, பல்லவன்நகர், பாண்டியன்நகர் மற்றும் ஐஎன்டியூசி காலனி ஆகியவற்றிற்கு அதிகாலை 4 மணி முதல் காலை 7 மணி வரை. புகார்- 9788810096.
ஞாயிற்றுக்கிழமை சந்தை, மேலமாசி வீதி, கிருஷ்ணராயர் தெப்பம், டி.வி.லேன், மேலப்பெருமாள்மேஸ்திரி வீதி, காக்காத் தோப்பு, குட்ஷெட் தெரு, நாடார் சந்து, அக்ரஹாரம் மணி அய்யர் சந்து, ஸ்காட் ரோடு, மணிநகரம், கனகவேல் காலனி, பேச்சியம்மன் படித்துறை ஆகியவற்றில் காலை 7 மணி முதல் 10.30 மணி வரை. புகார்- 9788810087 மற்றும் 9788810100.
பெரியார் பேருந்து நிலையம், திடீர்நகர், மேலவாசல், பெருமாள் கோவில், கட்ராபாளையம், நேதாஜி சாலை, காஜிமார் தெரு, குப்புப்பிள்ளை தோப்பு, பாண்டிய வேளாளர் தெரு, பள்ளிக்கூடத் தெரு, மீனாட்சி தியேட்டர், எப்.எப்.ரோடு, மேலமாசி வீதி பகுதி, தெற்கு ஆவணி மூலவீதி ஆகியவற்றில் பகல் 12 மணி முதல் மாலை 6 மணி வரை.புகார்-9788810087, 9788810090 மற்றும் 9442462531.
விராட்டிபத்து, முத்து தேவர் காலனி, ஜெய்நகர், எச்.எம்.எஸ்.காலனி, ஆனந்தராஜ் நகர், இருளாண்டித்தேவர் காலனி, கிருதுமால்நகர், அங்காள ஈஸ்வரி நகர் ஆகிய பகுதிகளில் மாலை 6 மணி முதல் இரவு 10.30 மணி வரை. புகார்- 9788810096.
இரண்டாம் நாள் (ஏப்.10): அருள்தாஸ்புரம், தத்தனேரி பகுதிகளில் அதிகாலை 3.30 மணி முதல் காலை 6.30 மணிவரை, புதூர் வண்டிப்பாதை, வள்ளுவர் காலனி, ஜவஹர்புரம், கிருஷ்ணாபுரம் காலனி, நாராயணபுரம், விஸ்வநாதபுரம், விசாலாட்சிபுரம், பழையநத்தம் சாலை பகுதியில் காலை 6.30 மணி முதல் பிற்பகல் 2.30 மணி வரை.
தாசில்தார்நகர், சிங்கராயர் குறுக்குத்தெரு, குருநகர், பகல் 1.30 மணி முதல் மாலை 4.30 மணி வரை, தமிழ்ச்சங்கம் மேல்நிலைத் தொட்டி பகிர்மான பகுதிகள், பேச்சியம்மன் படித்துறை சாலை, வடக்குமாசி வீதி, வடக்கு கிருஷ்ணன் கோவில் தெரு, மேல ஆவணி மூலவீதி, தாசில்தார் பள்ளி வாசல், தமிழ் மீன்காரத் தெரு, எம்.எம்.சி.காலனி, ஆதி மூலம் பிள்ளை தெரு, வெங்கடாசாமி நாயுடு அக்ரஹாரம், கோவிந்தன் செட்டி தெரு, அனுமார் கோவில் படித்துரை, திருமலைராயர் படித்துரை, தைக்கால் தெருக்கள், கீழப்பட்டமார் தெரு, வடக்கு மாசி வீதி ஆகியவற்றில் வரும் 10 ஆம் தேதி செவ்வாய்க்கிழமை காலை 7 மணி முதல் 10.30 மணி வரை. புகார்- 9788810087 மற்றும் 9788810100.
சுப்பிரமணியபுரம் தெருக்கள், ஜெய்ஹிந்த்புரம் 2 -ஆவது பிரதான சாலை, செட்டியூரணி, எம்.சி.சி.காலனி, எம்.கே.புரம் பிரதான சாலை, ஜெய்ஹிந்த்புரம் முதலாவது தெரு ஆகியவற்றில் பிற்பகல் 1 மணி முதல் மாலை 5.30 மணி வரை மற்றும் மாலை 5.30 மணி முதல் 6.30 மணி வரை. புகார்- 9788810082.
அருள்தாஸ்புரம் பகுதி, சுந்தரராஜபுரம், சோலையழகுபுரம், பாரதியார் தெருப்பகுதியில் இரவு 8 மணி முதல் நள்ளிரவு 12.30 மணி வரை, ரேஸ்கோர்ஸ் பகுதியில் அதிகாலை 3.30 மணி முதல் காலை 6 மணி வரை.
சம்மட்டிபுரம், எம்.எம்.நகர், வெள்ளக்கண்ணு தியேட்டர், சொக்கலிங்கம் நகர் பகுதியில் மாலை 6.30 மணி முதல் இரவு 10.30 மணி வரை. புகார் 9788810096
மூன்றாம் நாள் (ஏப்.11): கீழமாசி வீதி தாசில்தார் பள்ளிவாசல், கீழமாரட் வீதி, ஆட்டுமந்தைப் பொட்டல், கரிம்ஷாபள்ளிவாசல், காயிதேமில்லத் தெரு, இஸ்மாயில்புரம், அருணாசலபுரம், கீழவெளிவீதி, லட்சுமிபுரம், கான்பாளையம் குறுக்குத் தெருக்கள் ஆகியவற்றில் மாலை 4 மணி முதல் இரவு 9 மணி வரை. புகார்- 9788810088, 943739521.
அரசரடி துரைச்சாமி நகர், வேல்முருகன்நகர் பகுதியில் காலை 9 மணி முதல் 10 மணி வரை. புகார்- 9344108334.
பழங்காநத்தம், வசந்தநகர் 4 வது தெரு, திருவள்ளுவர்நகர், அக்ரஹாரம், தண்டல்காரன்பட்டியில் காலை 9 மணி முதல் பிற்பகல் 2 மணி வரை. புகாருக்கு 9344108334.
சத்தியமூர்த்திநகர் 1 முதல் 3 தெருக்கள் மற்றும் குறுக்குத் தெருக்களில் மாலை 3 மணி முதல் 6 மணி வரை. புகாருக்கு 9344108334.
ராஜாஜி பூங்கா பகுதிகளிலும், குருவிக்காரன் சாலை, தல்லாகுளம், அழகர்கோவில் சாலை, பனகல் சாலை, செனாய் நகர் பகுதிகளில் காலை 6 மணி முதல் மாலை 5 மணி வரை, கோரிப்பாளையம், சொக்கிகுளம் பகுதியில் மாலை 4 மணி முதல் இரவு 7 மணி வரை.
தெற்குமாசி வீதி, தெற்கு பெருமாள் மேஸ்திரி வீதி, காமாட்சியம்மன் கோவில் தெரு, முத்தையா பிள்ளை தெரு, ஜடாமுனிகோவில் தெரு, மஹால், சின்னக்கடைத் தெரு, பந்தடி தெரு, கான்சாமேட்டுத்தெரு, தெற்காவணிமூலவீதி, ஓதுவார் தெரு, வெங்கலக்கடைத் தெரு, சப்பாணிகோவில் தெரு, காஜா தெரு ஆகியவற்றில் மாலை 3 மணி முதல் 6 மணி வரை. புகாருக்கு 9788810090, 9442462531.
சிந்தாமணிரோடு, நாகுபிள்ளைத் தோப்பு பகுதி, வாழைத்தோப்பு பகுதி, கிருஷ்ணாபுரம் இரு தெருக்கள், பச்சரிசிக்காரத் தெரு, சப்பாணிகோவில் தெரு, புதுமாகாளிபட்டி சாலை, பாலுச்சாமி அய்யர் தெரு, ராமச்சந்திரபுரம் குறுக்குத் தெருக்கள் பகுதியில் மாலை 6 மணி முதல் இரவு 11 மணி வரை. புகாருக்கு 9442026766 மற்றும் 9442327274.
நான்காம் நாள் (ஏப்.12): ஆரப்பாளையம், எல்லீஸ்நகர், எஸ்.எஸ்.காலனி, மகபூப்பாளையம், அன்சாரிநகர் பகுதியில் அதிகாலை 4 மணி முதல் இரவு 7 மணி வரை. புகாருக்கு 9442026766, 9442327274.
பழங்காநத்தம், பசும்பொன்நகர், கீழத்தெரு, மருதுபாண்டியர் தெரு, நேருநகர், மாடக்குளம், வி.கே.பி.நகர், வடக்குத் தெரு பகுதிகளில் காலை 8 மணி முதல் பிற்பகல் 2 மணி வரை. புகார்- 93444108334.
ஜான்சிராணி பூங்கா, தென்னோலைக்காரத் தெரு, தெற்கு கிருஷ்ணன் கோவில் தெரு, தெற்கு மாரட் வீதி, தெற்கு வெளிவீதி, நாடார் வித்யாசாலை, மீன்கடை, எப்.எப்.சாலை, மஹால் மற்றும் பந்தடித்தெருக்களில் பிற்பகல் 2.30 மணி முதல் மாலை 6 மணி வரை. புகார்- 9788810090, 9788810099, 9788810087.
சன்னியாசி ஊருணி, காமராஜர்புரம் பகுதிகள், பாலரங்காபுரம், சின்னக்கண்மாய், பங்கஜம் காலனி, தெப்பக்குளம், தமிழன்தெரு, மீனாட்சிநகர், அனுப்பானடி, நரசிம்மபுரம், நவரத்தினபுரம், சீனிவாசன் பெருமாள் கோவில் தெரு, ரசாயனபட்டறை, கீழச்சந்தைப் பேட்டை பகுதிகளில் மாலை 6 மணி முதல் இரவு 11 மணிவரை. புகார் தெரிவிக்க- 9788810088, 9788810099, 9443739521, 9486555172 என குறிப்பிடப்பட்டுள்ளது.
கோரிப்பாளையம், ராஜாஜி பூங்கா ஆகிய குறிப்பிட்ட பகுதிகளில் தொடர்ந்து 4 நாள்களும் குறிப்பிட்ட நேரங்களில் குடிநீர் விநியோகமிருக்கும் வகையில் விநியோக முறை செயல்படுத்தப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

ஜூன் 25: தொடர்ந்து 3-வது நாளாகக் குறைந்த தங்கம் விலை! இன்று எவ்வளவு?

பங்குச்சந்தைகள் உயர்வுடன் தொடக்கம்! ஆட்டோ, ரியல் எஸ்டேட் பங்குகள் லாபம்!

சட்டப்பேரவை மரபை மீறவில்லை! திமுக செய்யாததை தவெக செய்கிறது: ஆதவ் அர்ஜுனா

ஐரோப்பாவில் கடும் வெய்யில்! பிரான்ஸில் 40 பேர் பலி!
விடியோக்கள்

நயினார் நாகேந்திரன் காமெடிதான் பேசுவார்! செங்கோட்டையன் விமர்சனம் | TVK | BJP

கோல் கீப்பர் வோசின்ஹாவின் கதை: ஓர் இரவு... எல்லாம் மாறியது! | Vozinha |

எலும்பு முறிவு, நரம்பு நோய்கள் தீர்க்கும் திருமாகறலீஸ்வரர் திருக்கோயில்!


