மேற்கு வங்கத்தில் 285 வாக்குச்சாவடிகளில் மே 21-இல் மறு வாக்குப்பதிவு!ஐபிஎல்: சென்னை சூப்பர் கிங்ஸ் மீண்டும் வெற்றி - மும்பையை வீழ்த்தியது!ம.பி. படகு விபத்து: பலி எண்ணிக்கை 11 ஆக உயர்வு அறுவைச் சிகிச்சை செய்துகொண்ட பவன் கல்யாணிடம் ஆந்திர முதல்வர் நலம் விசாரிப்பு ஜெர்மனியிலிருந்து 5,000 ராணுவ வீரர்களைத் திரும்பப் பெறும் அமெரிக்கா! டி20 உலகக் கோப்பைத் தொடருக்கான இந்திய அணி அறிவிப்பு! ஆர்பிஐ துணை ஆளுநராக ரோகித் ஜெயின் நியமனம் கடற்கொள்ளையர்களைப் போன்று செயல்பட்ட அமெரிக்கப் படையினர்: டொனால்ட் டிரம்ப் குமாரராணி மீனா முத்தையா மறைவுக்கு முதல்வர் இரங்கல்! குமாரராணி மீனா முத்தையா காலமானார்! ஜன நாயகன் லீக்: 9 பேர் ஜாமின் மனு தள்ளுபடி சிலிண்டர் விலையால் விடுதி கட்டணங்களும் அதிரடி உயர்வுநாடாளுமன்றத்தின் பொதுக் கணக்குக் குழுவின் தலைவராக கே.சி. வேணுகோபால்!தனித்த ஆளாக ஆட்சியைக் கைப்பற்றும் வலிமையை விஜய் பெறவில்லை: திருமாவளவன்
/

மேலூரில் இளைய தலைமுறை சேவை அமைப்பினர் துப்புரவுப் பணி நிறுத்தம்

நகராட்சி ஒத்துழைக்காததால், மேலூர் இளைய தலைமுறை சேவை அமைப்பினர் ஞாயிற்றுக்கிழமை துப்புரவுப் பணியை நிறுத்தினர்.

Updated On :9 ஏப்ரல் 2018, 1:32 am

நகராட்சி ஒத்துழைக்காததால், மேலூர் இளைய தலைமுறை சேவை அமைப்பினர் ஞாயிற்றுக்கிழமை துப்புரவுப் பணியை நிறுத்தினர்.
    மேலூரில் மாணவர்கள் மற்றும் இளைஞர்கள் ஒன்றிணைந்து இளைய தலைமுறை சேவை அமைப்பை நிறுவியுள்ளனர். 
  இவர்கள், பனை மரக் கொட்டகைகளை நடுவது, துப்புரவுப் பணிகளை மேற்கொள்வது உள்ளிட்ட பல்வேறு பணிகளைச் செய்து வருகின்றனர். இந்த அமைப்பினர், மேலூரில் பெரியாறு கிளைக் கால்வாய்ப் பகுதியிலுள்ள குப்பைகளை அகற்றும் பணியை ஞாயிற்றுக்கிழமை துவங்கினர். பின்னர்,  மேலூர் நகராட்சி நிர்வாகத்தினர் ஒத்துழைக்கவில்லை எனக் கூறி, சேவைப் பணியை பாதியுடன் நிறுத்தினர்.
     இது குறித்து இவ்வமைப்பின் ஒருங்கிணைப்பாளர் சரவணன் கூறுகையில், நகராட்சிக்கு ஏற்கெனவே தகவல் தெரிவித்து விட்டுத்தான் பணியைத் தொடங்கினோம். இதற்காக, ஜேசிபி மற்றும் ஒரு டிராக்டரையும் வாடகைக்கு எடுத்து வந்தோம். ஆனால், நகராட்சி அலுவலர்கள் டிராக்டரை கொண்டுவந்து திரும்பிச் சென்றுவிட்டனர். எனவே, பணியை தொடர முடியவில்லை என்றார்.
     நகராட்சி தரப்பில் கூறுகையில், காலை 9 மணிக்கு துப்புரவு பணியில் ஈடுபடப் போவதாகத் தெரிவித்தனர்.
 நீண்ட நேரமாக யாரும் வரவில்லை. மேலும், விடுமுறை தினம் என்பதால்,  காத்திருந்து பின் புறப்பட்டுச் சென்றுவிட்டதாகத் தெரிவிக்கப்பட்டது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.