பூங்கா முருகன் கோயிலில் அன்னதானம்

மதுரை மாநகராட்சி நிர்வாகத்தின் கீழ் உள்ள பூங்கா முருகன் கோயிலில் சித்திரைத் திருவிழாவுக்கான அன்னதானம் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.   
Updated on
1 min read

மதுரை மாநகராட்சி நிர்வாகத்தின் கீழ் உள்ள பூங்கா முருகன் கோயிலில் சித்திரைத் திருவிழாவுக்கான அன்னதானம் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.   
மதுரை வடக்கு சட்டப்பேரவைத் தொகுதி உறுப்பினர் வி.வி. ராஜன் செல்லப்பா தலைமையில், மாநகராட்சி ஆணையர் அனீஷ்சேகர் அன்னதான நிகழ்ச்சியை தொடக்கிவைத்தார். இதில், ஏராளமான பொதுமக்கள் கலந்து கொண்டனர்.
விடிய விடிய பொருள்காட்சி: மதுரை தமுக்கத்தில் அரசு சித்திரைப் பொருள்காட்சி நடந்து வருகிறது. கள்ளழகர் எதிர்சேவையை முன்னிட்டு, ஞாயிற்றுக்கிழமை இரவு தல்லாகுளம் பகுதியில் விடிய விடிய பொதுமக்கள் விழித்திருந்து கள்ளழகரை வழிபடுவர். எனவே, தமுக்கம் பொருள்காட்சியும் விடிய விடிய நடைபெற்றது. கிராமத்து மக்கள் ஏராளமானோர் பொருள்காட்சியை பார்வையிட்டனர்.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com