அழகர்கோவில் மலைமீதுள்ள சோலைமலை முருகன் கோயில் மற்றும் திருப்பரங்குன்றத்தில் ஆடிக் கார்த்திகை விழாவையொட்டி ஏராளமான பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்தனர்.
சோலைமலை முருகன் கோயிலில் ஆடி கிருத்திகையையொட்டி சுப்பிரமணியர் வள்ளி, தெய்வானை சமேதரராக சஷ்டி மண்டபத்தில் எழுந்தருளினார். அங்கு கும்ப கலசங்களில் புனிததீர்த்தங்கள் வைக்கப்பட்டு பால், பன்னீர், சந்தனம் உள்ளிட்ட 16 வகை அபிஷேகங்களும், சிறப்பு பூஜைகளும் நடைபெற்றன. மதுரை விரகனூர், குலமங்கலம், தண்டலை திருப்புகழ் சபையினர், விராலிமலை, பாதயாத்திரைக்குழுவினர் மற்றும் ஏராளமான முருக பக்தர்கள் நூபுரகங்கை தீர்த்தத்தில் புனித நீராடி ராக்காயி அம்மனை வழிபட்டனர். பின்னர் அவர்கள் சோலைமலை முருகன் கோயில் ஆடிக்கார்த்திகை சிறப்பு அபிஷேக ஆராதனைகளில் பங்கேற்றனர். மேலும் ஏராளமான பக்தர்கள் நெய் விளக்கேற்றி வழிபட்டனர்.
திருப்பரங்குன்றம்: ஆடிக் கார்த்திகையை முன்னிட்டு ஞாயிற்றுக்கிழமை திருப்பரங்குன்றத்தில் காலையில் உற்சவர் சன்னதியில் சுப்பிரமணிய சுவாமி தெய்வானைக்கு பால், பன்னீர், இளநீர் உள்ளிட்ட 16 வகை பொருள்களால் சிறப்பு அபிஷேகம் நடை பெற்றன.
இதைத்தொடர்ந்து சுவாமி தங்க சிம்மாசனத்தில் சன்னதி தெருவில் உள்ள ஆடிக் கார்த்திகை மண்டபத்தில் எழுந்தருளி பக்தர்களுக்கு அருள்பாலித்தார். மாலை 6 மணிக்கு சுப்பிரமணிய சுவாமி, தெய்வானைக்கு சிறப்பு அபிஷேகம், ஆராதனைகள் நடைபெற்றது.
பின்பு சிறப்பு அலங்காரத்தில் தங்க மயில் வாகனத்தில் எழுந்தருளிய சுவாமி, தெய்வானைஅம்மன் திருவீதி உலா வந்து பக்தர்களுக்கு அருள்பாலித்தனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

