மதுரை அண்ணா நகர் வேளாங்கண்ணி அன்னை ஆலய திருவிழா கொடியேற்றத்துடன் புதன்கிழமை தொடங்கியது.
இந்த திருவிழா செப்டம்பர் 8 ஆம் தேதி வரை நடைபெறுகிறது. திண்டுக்கல் மறைமாவட்ட ஆயர் பி.தாமஸ் பால்சாமி கொடியற்றி, சிறப்பு திருப்பலி நடத்தினார். தொடர்ந்து செப்டம்பர் 7 ஆம் தேதி வரை தினமும் மாலை 6 மணிக்கு சிறப்பு நவநாள் மறையுரையும், திருப்பலியும் நடைபெறும். செப்டம்பர் 8 ஆம் தேதி பெருவிழா நடைபெறும்.
அன்றைய தினம் மாலை மதுரை உயர் மறை மாவட்ட பேராயர் அந்தோணி பாப்புசாமி தலைமையில் கூட்டுத் திருப்பலி நடைபெறும். பின்னர் இரவு வேளாங்கண்ணி அன்னையின் சப்பர பவனி நடைபெறும். செப்டம்பர் 9 ஆம் தேதி கொடியிறக்கத்துடன் விழா நிறைவு பெறுகிறது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.







