திருப்பரங்குன்றம் சுப்பிரமணிய சுவாமி கோயிலில் தெய்வானை அம்மனுக்கு எண்ணெய் காப்பு திருவிழா திங்கள்கிழமை தொடங்கியது.
திருப்பரங்குன்றத்தில் தெய்வானை அம்மனுக்கு மட்டும் எண்ணெய் காப்பு திருவிழா மார்கழி மாதத்தில் தொடர்ந்து 5 நாள்கள் நடைபெறும். நிகழ் ஆண்டில் இவ்விழா திங்கள்கிழமை தொடங்கியது.
விழாவையொட்டி உற்சவர் சன்னதியில் தெய்வானை அம்மனுக்கு பால், சந்தனம், பன்னீர் உள்ளிட்ட 16 வகை அபிஷேகம் நடைபெற்று சிறப்பு அலங்காரத்தில் கோயில் திருவாச்சி மண்டபத்தில் இரவு 7 மணிக்கு எழுந்தருளினார். அங்கு தெய்வானை அம்மனின் கூந்தலுக்கு முலிகை தைலம் தேய்த்தல், வெள்ளி சீப்பு கொண்டு தலை வாருதல், தங்க ஊசி கொண்டு பல்துலக்குதல், கண்ணாடி பார்த்தல் உள்ளிட்ட வைபவங்கள் நடைபெற்றன. அதையடுத்து சிறப்பு தீபாராதனை நடைபெற்றது.
இதில், திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர். அவர்களுக்கு மூலிகை எண்ணெய் பிரசாதமாக வழங்கப்பட்டது. விழாவின் நிறைவுநாளான வரும் 28 ஆம் தேதி தெய்வானை அம்மன் பல்லக்கில் வீதி உலா வரும் நிகழ்ச்சி நடைபெறும்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.








