தீண்டாமைச் சுவர் விவகாரம்: மலையில் 7-ஆவது நாளாக தொடரும் போராட்டம்
மதுரை மாவட்டம், பேரையூர் அருகே கோயிலைச் சுற்றி கட்டப்பட்டுள்ள தீண்டாமைச் சுவரை அகற்ற வலியுறுத்தி, மலையில் குடியேறிய கிராம


மதுரை மாவட்டம், பேரையூர் அருகே கோயிலைச் சுற்றி கட்டப்பட்டுள்ள தீண்டாமைச் சுவரை அகற்ற வலியுறுத்தி, மலையில் குடியேறிய கிராம மக்கள் 7-ஆவது நாளாக ஞாயிற்றுக்கிழமையும் போராட்டத்தை தொடர்ந்துள்ளதால், அப்பகுதியில் பதற்றம் ஏற்பட்டுள்ளது.
பேரையூர் அருகே உள்ள சந்தையூர் ராஜகாளியம்மன் கோயிலைச் சுற்றியுள்ள பொதுப் பயன்பாட்டு நிலத்தில், ஒரு
பிரிவினரின் சார்பில் தடுப்புச்சுவர் கடந்த 2013-இல் கட்டப்பட்டது. இதற்கு, மற்றொரு பிரிவினர் எதிர்ப்புத் தெரிவித்து தொடர்ந்த வழக்கில் சுவரை அகற்றுமாறு உயர் நீதிமன்றம் உத்தரவிட்டது.
ஆனால், நீதிமன்ற உத்தரவின்படி சுவர் அகற்றப்படாததால், சந்தையூரைச் சேர்ந்த கிராம மக்கள் அப்பகுதியில் உள்ள தேன் மலையாண்டி கோயில் மலையில் குடியேறும் போராட்டத்தை ஜனவரி 29-ஆம் தேதி தொடங்கினர். மாவட்ட ஆட்சியர் கொ. வீரராகவ ராவ் சந்தையூருக்குச் சென்று பேச்சுவார்த்தை நடத்தியும், கிராம மக்கள் போராட்டத்தை கைவிட மறுத்துவிட்டனர்.
கிராம மக்கள் மலையில் தங்கியிருந்தவாறே போராட்டத்தை தொடர்ந்து வருகின்றனர். இரவில் வெட்ட வெளியில் கொட்டும் பனியில் மலை மீது தங்கியிருப்பதால், கிராம மக்கள் சிலருக்கு உடல்நலக் குறைவு ஏற்பட்டுள்ளது. இதனால் போராட்டத்தை கைவிடும்படி, பல்வேறு அமைப்புகளைச் சேர்ந்தவர்கள் அவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தி வந்தனர்.
ஆனாலும், போராட்டத்தைக் கைவிட கிராம மக்கள் மறுப்பு தெரிவித்து 7-ஆவது நாளாக ஞாயிற்றுக்கிழமையும் தொடர்ந்துள்ளனர்.
இப் போராட்டத்தால் அப்பகுதியில் பதற்றம் அதிகரித்துள்ளது. இதனால், கூடுதல் போலீஸார் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டுள்ளனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்



வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...