மகளிர் இடஒதுக்கீட்டுக்கு ஆதரவு; தொகுதி மறுவரையறைக்கு எதிர்ப்பு! - ராகுல்தொகுதி மறுசீரமைப்புக்கு எதிர்ப்பு: தனிப்பட்ட இயக்கத்தின் போராட்டம் அல்ல; தமிழ்நாட்டின் போராட்டம் - மு.க. ஸ்டாலின்பாக். மூலம் அமெரிக்காவுடன் தொடரும் பேச்சு! - ஈரான் அரசு அறிவிப்பு!அதிமுக அரசின் ஏதாவது ஒரு சாதனையைக் கூறி பழனிசாமியால் ஓட்டு கேட்க முடியுமா? மு.க. ஸ்டாலின்தேர்தல் முக்கியமல்ல, சுயமரியாதையே முக்கியம் : மு.க. ஸ்டாலின் உ.பி.யில் 17 வயது சிறுமிக்கு கூட்டுப் பாலியல் வன்கொடுமை! தூக்கிட்டுத் தற்கொலை!சிபிஎஸ்இ 10-ஆம் வகுப்புப் பொதுத் தேர்வு முடிவுகள் வெளியீடுமீஞ்சூரில் மாணவியிடம் பாலியல் அத்துமீறல்! அரிவாளால் வெட்டிய இளைஞர்கள்! திமுக தோற்க வேண்டும் என ராகுல் நினைக்கிறார்: அண்ணாமலை பேச்சுதொகுதி மறுவரையறை! தமிழ்நாட்டில் நாளை கருப்புக் கொடிப் போராட்டம்! - மு.க. ஸ்டாலின் அறிவிப்பு
/

மதுரையில் நாளை காங்கிரஸ் ஆலோசனைக் கூட்டம்

மதுரையில் செவ்வாய்க்கிழமை (ஜூலை10) காங்கிரஸ் கட்சியின் நிர்வாகிகள் ஆலோசனைக் கூட்டம் நடைபெறவுள்ளது.

Updated On :9 ஜூலை 2018, 1:42 am

மதுரையில் செவ்வாய்க்கிழமை (ஜூலை10) காங்கிரஸ் கட்சியின் நிர்வாகிகள் ஆலோசனைக் கூட்டம் நடைபெறவுள்ளது. இதில் அக்கட்சியின் மாநிலத் தலைவர் எஸ்.திருநாவுக்கரசர் பங்கேற்கிறார்.
   இதுகுறித்து காங்கிரஸ் கட்சியின் மதுரை மாநகர் மாவட்டத் தலைவர் வீ.கார்த்திகேயன் விடுத்துள்ள செய்திக்குறிப்பு:  மதுரை மாநகர் மாவட்ட காங்கிரஸ் கட்சியின் செயல்வீரர்கள் ஆலோசனைக் கூட்டம் செவ்வாய்க்கிழமை காலை 10 மணிக்கு அண்ணாநகர் பகுதியில் உள்ள தனியார் மண்டபத்தில் நடைபெறவுள்ளது. கூட்டத்தில் கட்சியின் மாநிலத் தலைவர் எஸ்.திருநாவுக்கரசர் பங்கேற்கிறார்.  அப்போது வாக்குச்சாவடி வாரியாக நிர்வாகிகளை மாநிலத் தலைவர் சந்தித்து ஆலோசனை நடத்தவுள்ளார்.  கூட்டத்தில் காங்கிரஸ் கட்சியின் சிறுபான்மைப் பிரிவு, மகிளா காங்கிரஸ், எஸ்.சி, எஸ்.டி. பிரிவு, மனித உரிமை பிரிவு, சேவாதளம், பட்டதாரிகள் பிரிவு மற்றும் கட்சியின் நிர்வாகிகள், மாநில பொதுக்குழு உறுப்பினர்கள், வட்டார நிர்வாகிகள் என அனைத்துத் தரப்பினரும் கலந்து கொள்ள வேண்டும் எனக் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.