ஆதிக்கவாதிகளையும் அடிமைகளையும் எதிர்த்து போராடி வெல்வோம்! முதல்வர் ஸ்டாலின் சூளுரை தங்கம் விலை சவரனுக்கு ரூ. 1,200 குறைவுபோா் விமானங்களுக்கு வானிலேயே எரிபொருள் நிரப்பும் தொழில்நுட்பம்: அமெரிக்க நிறுவனத்துடன் மும்பை நிறுவனம் ஒப்பந்தம்வீட்டை குத்தகைக்கு விடுவதாக ரூ.14.5 லட்சம் மோசடி: ஒருவா் கைதுசட்டப்பேரவைத் தோ்தல் வாக்கு எண்ணிக்கை நாளில் கொல்கத்தாவுக்கு வர முடியுமா?அமித் ஷாவுக்கு மம்தா மருமகன் சவால்காட்பாடி - திருப்பதி மெமு ரயில்கள் 15 நாள்கள் ரத்து!இந்தியா-நியூஸிலாந்து இடையே ஏப். 27-ல் தடையற்ற வா்த்தக ஒப்பந்தம்
/

நகைக்கடையில் 3 பவுன் நகை திருட்டு

மதுரை நகைக்கடையில் ஊழியர்களை ஏமாற்றி 3 பவுன் நகையை திருடிச்சென்றதாக இரு பெண்கள் மீது போலீஸார் ஞாயிற்றுக்கிழமை வழக்குப்பதிவு செய்துள்ளனர்.

Updated On :9 ஜூலை 2018, 1:43 am

மதுரை நகைக்கடையில் ஊழியர்களை ஏமாற்றி 3 பவுன் நகையை திருடிச்சென்றதாக இரு பெண்கள் மீது போலீஸார் ஞாயிற்றுக்கிழமை வழக்குப்பதிவு செய்துள்ளனர்.
   மதுரை மேலமாசி வீதியில் பிரபல நகைக்கடை உள்ளது. இங்கு ஜூன் 7-ஆம் தேதி நகை வாங்குவதாக இரு பெண்கள் வந்துள்ளனர். 
  ஊழியர்கள் காட்டிய பல்வேறு நகைகளை பார்த்த பெண்கள் பின்னர் வருவதாக கூறிச்சென்றுள்ளனர். பெண்கள் இருவரும் சென்றபிறகு நகைகளை சரிபார்த்தபோது 3பவுன் நகை குறைந்தது. இதையடுத்து கண்காணிப்பு கேமராவில் பதிவான காட்சிகளை பார்த்தபோது பெண்கள் இருவரும், நகைக்கடை ஊழியருக்கு போக்குகாட்டி 3 பவுன் நகைகளை திருடியது தெரிந்தது. 
    சம்பவம் தொடர்பாக கடை மேலாளர் சுரேஷ்குமார் அளித்தப்புகாரின்பேரில் தெற்குவாசல் போலீஸார் வழக்குப்பதிவுசெய்து பெண்களை தேடி வருகின்றனர்.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.