அவையில் தென் மாநிலங்களின் பலம் குறையாது: அமித் ஷா விளக்கம்தொகுதி மறுவரையறை முடிவைத் தற்காலிகமாக நிறுத்திவைக்க அரசுக்கு உத்தவ் தாக்கரே கோரிக்கை என்னுடைய தொகுதிக்கு மாதம் ஒருமுறை வருவேன்! விஜய் பேச்சுஅரசுத் திட்டங்களை மக்களே தீர்மானிக்கலாம்: தவெக தோ்தல் அறிக்கை!சரிந்து முடிந்த பங்குச்சந்தை! ஆட்டோ, எண்ணெய் & எரிவாயு பங்குகள் சரிவு!டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு உயர்வுஈரான் சிறையில் உள்ள நோபல் பரிசு பெற்ற நர்கிஸ் முகமதியின் உடல்நிலை கவலைக்கிடம்தொகுதி மறுவரையறையால் எந்த மாநிலத்திற்கும் இழப்பு ஏற்படாது: அர்ஜுன் ராம் மேக்வால்மூன்று மசோதாக்கள் மீதான வாக்கெடுப்பு நாளை (ஏப். 17) நடைபெறும்! - ஓம் பிர்லா
/

பிச்சைக்காரரை தலையில் கல்லை போட்டு கொலை செய்தவர் கைது

மதுரை ரயில் நிலையத்தில் பிச்சைக்காரர் தலையில் கல்லைப்போட்டு கொலை செய்தவரை போலீஸார் ஞாயிற்றுக்கிழமை கைது செய்தனர்.

Updated On :9 ஜூலை 2018, 1:44 am

மதுரை ரயில் நிலையத்தில் பிச்சைக்காரர் தலையில் கல்லைப்போட்டு கொலை செய்தவரை போலீஸார் ஞாயிற்றுக்கிழமை கைது செய்தனர்.
மதுரை பைக்காரா முத்துராமலிங்கபுரத்தைச் சேர்ந்தவர் கருப்பையா (56). பிச்சை எடுத்து வந்த இவர், பெண்களை வைத்து விபசாரத்திலும் ஈடுபட்டு வந்துள்ளார். 
இவர் ரயில் நிலையம் முன்பு தலையில் காயங்களுடன் சனிக்கிழமை இரவு இறந்துகிடந்தார். இதுகுறித்து தகவலின்பேரில் திலகர்திடல் போலீஸார் சம்பவ இடத்துக்குச் சென்று கருப்பையாவின் சடலத்தை கைப்பற்றினர். 
சம்பவம் தொடர்பாக ஆனந்தி என்பவர் அளித்தப் புகாரின்பேரில் போலீஸார் விசாரணை நடத்தினர். இதில் கருப்பையா தனது மனைவி உள்பட சில பெண்களை வைத்து விபசாரத்தில் ஈடுபட்டு வந்துள்ளார். மேலும் மதுரை தனக்கன் குளத்தைச் சேர்ந்த மாரியப்பன் என்ற மாணிக்கத்தின்(46) மனைவியையும் விபசாரத்தில் ஈடுபடுத்தியுள்ளார். மதுபோதையில் மாரியப்பனிடம் முறைகேடான உறவுக்கு கட்டாயப்படுத்தியுள்ளார். இதனால் ஆத்திரமடைந்த மாரியப்பன்  சனிக்கிழமை இரவு, ரயில்நிலையம் முன்பாக மாரியப்பனின் தலையில் கல்லைப்போட்டு விட்டு தப்பிச்,சென்றுவிட்டார். தலையில் பலத்த காயமடைந்த கருப்பையா சம்பவ இடத்திலேயே இறந்துள்ளார் என்பதும் விசாரணையில் தெரியவந்தது. இதையடுத்து  மாரியப்பனை போலீஸார் கைது செய்தனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.