மதுரை மாவட்டம் கீழவளவு அருகே சிசி கண்மாய் கிரானைட் குவாரிப்பள்ளத்தில் ஞாயிற்றுக்கிழமை நீரில் மூழ்கிய இரு சகோதரர்களை மீட்கும் பணி தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டது.
மேலூர் வெள்ளநாதன்பட்டியைச் சேர்ந்த சர்க்கரை மகன்கள் சதாம் உசேன் (22), சலீம் மற்றும் சந்தைப்பேட்டையைச் சேர்ந்த ராஜாமுகமது மகன் இஸ்ரத்முகமது (15) ஆகியோர் கீழவளவு சிசி கண்மாயிலுள்ள கிரானைட் குவாரிப்பள்ளத்தில் குளிக்கச்சென்றனர். அப்போது, நீச்சல் தெரியாத சதாம் உசேன் நீரில் மூழ்கினார்.
அவரைக் காப்பற்ற சலீமும் முயன்றபோது இருவரும் நீரில் மூழ்கினர். இதைப் பார்த்த இஸ்ரத் முகமது சத்தமிட்டுள்ளார்.
உடனே அருகிலிருந்தவர்கள் ஓடிவந்து தீயணைப்பு மீட்ப்புப் படையினருக்குத் தகவல் தெரிவித்தனர். மேலும் உதவிக்கு கொட்டாம்பட்டி தீயணைப்பு மீட்புப் படையினரும் மீட்புப்பணியில் ஈடுபட்டனர். குவாரிப்பள்ளம் நூறு அடிக்குமேல் ஆழமானது என்பதால் தேடும் பணியைத் தொடர முடியவில்லை. மேலும் இரவு நீண்டநேரமானதால், மீட்புப்பணி தற்காலிகமாக நிறுத்தப்பட்டது. இச்சம்பவம் குறித்து கீழவளவு போலீஸார் விசாரித்து வருகின்றனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.








