வெங்காயம் கொள்முதல் விலை கிலோவுக்கு ரூ.16.50-ஆக நிா்ணயம்: இன்று முதல் அமல்வங்கிக் கடன் வழங்கல் 17.44% அதிகரிப்புபாகிஸ்தான் பாதுகாப்பு பட்ஜெட் 17.6% அதிகரிப்புமேற்கு தொடா்ச்சி மலை, டெல்டா மாவட்டங்களில் ஜூன் 15 வரை மழைக்கு வாய்ப்பு இந்தியா மீது தாக்குதல் நடத்த ஐரோப்பிய ஆயுதங்கள்: அமைச்சா் ஜெய்சங்கா் குற்றச்சாட்டு
/

மருத்துவர் வீட்டில் 105 பவுன் நகைகள் திருட்டு ஓராண்டுக்கு பின் போலீஸார் வழக்குப்பதிவு

திருப்பரங்குன்றம் அருகே மருத்துவர் வீட்டில் நகை, பணம் திருடு போனது தொடர்பாக ஓராண்டுக்குப் பின் ஞாயிற்றுக்கிழமை திருநகர் போலீஸார் வழக்குப்பதிவு செய்து விசாரிக்கின்றனர்.   

Updated On :23 ஜூலை 2018, 5:57 am IST

திருப்பரங்குன்றம் அருகே மருத்துவர் வீட்டில் நகை, பணம் திருடு போனது தொடர்பாக ஓராண்டுக்குப் பின் ஞாயிற்றுக்கிழமை திருநகர் போலீஸார் வழக்குப்பதிவு செய்து விசாரிக்கின்றனர்.   
        ஹாரிவிபட்டியைச் சேர்ந்தவர் வேலுச்சாமி. மருத்துவர். இவரது வீட்டில் கடந்த 2017 ஜூன் மாதம் கண்காணிப்பு காமிரா பொருத்த வந்த ரவி, ரமேஷ் ஆகிய இருவரும் வீட்டில் இருந்த 105 பவுன் நகை மற்றும் ரூ.98 ஆயிரம் பணத்தை திருடிச்சென்று விட்டனராம்.
       இதுகுறித்து அப்போது புகார் அளித்தபோது போலீஸார் புகார் ஏற்க மறுத்துவிட்டனராம். இந்நிலையில் மருத்துவர் மதுரை துணை ஆணையர் அலுவலகத்தில் புகார் அளித்தன்பேரில் திருநகர் போலீஸார் ஓராண்டுக்குப்பின் வழக்குப்பதிவு செய்து விசாரிக்கின்றனர்.    
             இதுகுறித்து போலீஸார் கூறியது:
      கடந்த ஓராண்டுக்கு முன் மருத்துவர் புகார் அளித்தபோது அவர் முன்னுக்குப்பின் முரணாகவும், சரியான முறையிலும் தெரிவிக்கவில்லை. இதனால் இந்த வழக்கு எடுத்துக் கொள்வதில் தாமதம் ஏற்பட்டது என்றனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.