விராலிமலை தொகுதி காலியானதாக அறிவிப்பு! 6 தொகுதிகளுக்கு இடைத்தேர்தல்!4 தொகுதிகளில் இடைத்தேர்தலுக்கு தடை விதிக்க உயர் நீதிமன்றம் மறுப்பு! முதல்வர் விஜய்யைச் சந்திக்கிறார் வைகோ!கோயில்களில் பூஜைப் பொருள்கள் விலை பட்டியல் கட்டாயம்! அமைச்சர் ரமேஷ் உத்தரவு!காவல் மரணமடைந்த ஆகாஷின் உடல் 102 நாள்களுக்குப் பிறகு தகனம்!தங்கம் விலை சவரனுக்கு இன்று ரூ. 240 குறைவு!மெஸ்ஸி ஹாட்ரிக்... வெற்றியுடன் தொடங்கியது ஆர்ஜென்டீனா!புதுச்சேரி அமைச்சரவை விரிவாக்கம்: மேலும் 3 அமைச்சர்கள் பதவியேற்பு!இன்று தினமணி ‘மாணவா் மலா்’ அறிமுக விழா: அமைச்சா் விஸ்வநாதன் பங்கேற்பு எல் நினோ-வால் தமிழகத்துக்கு கடும் பாதிப்பு: மத்திய வேளாண் அமைச்சா் உ.பி., குஜராத் உள்பட 13 மாநிலங்களில் வருவாய் உபரி: சிஏஜி கச்சா எண்ணெய், எரிவாயு விலை: போருக்கு முந்தைய நிலையை எட்ட பல மாதங்கள் ஆகும்- நிபுணா்கள் தகவல் ஹைதராபாத் சாலைக்கு டிரம்ப் பெயா்! தெலங்கானா காங்கிரஸ் அரசு முடிவு மே மாதத்தில் மொத்த விற்பனை பணவீக்கம் 9.68%
/

மாவட்ட அளவில் யோகாசனப் போட்டி

திருப்பரங்குன்றத்தை அடுத்த தனக்கன்குளம் யோகா நகர் சுவாமி சிவானந்தா யோகாசன ஆய்வு மையத்தில், மாவட்ட அளவிலான யோகாசன ப் போட்டிகள் சனிக்கிழமை நடைபெற்றன. 

Updated On :23 ஜூலை 2018, 7:05 am IST

திருப்பரங்குன்றத்தை அடுத்த தனக்கன்குளம் யோகா நகர் சுவாமி சிவானந்தா யோகாசன ஆய்வு மையத்தில், மாவட்ட அளவிலான யோகாசன ப் போட்டிகள் சனிக்கிழமை நடைபெற்றன. 
தமிழ்நாடு யோகாசன சங்கத் தலைவர் பி.வி. பார்த்தசாரதி தலைமை வகித்தார். சங்க பொதுச் செயலர் யோகி. ராமலிங்கம் போட்டியை தொடக்கி வைத்தார். மாவட்ட அளவில் நடைபெற்ற இப்போட்டியில், 8 முதல் 11, 11 முதல் 14, 14 முதல் 17, 17 முதல் 21, 21 முதல் 25, 25 முதல் 35 மற்றும் 35 வயதுக்கும் மேலுள்ள அனைவரும் பொதுப் பிரிவில் போட்டியிட்டனர்.
இப்போட்டியில் 15 பள்ளி, கல்லூரிகளிலிருந்து 200-க்கும் மேற்பட்டோர் பங்கேற்றனர். 
போட்டிகுறித்து, தமிழ்நாடு யோகாசன பொதுச் செயலர் யோகி. ராமலிங்கம் கூறுகையில், மாவட்ட அளவில் வயது வாரியாக 7 பிரிவுகளின் கீழ் நடைபெறும் இப் போட்டிகளில் முதல் 3 இடங்களைப் பிடிப்பவர்கள், ஆகஸ்ட் 29, 30 ஆகிய தேதிகளில் நடைபெறவுள்ள மாநில அளவிலான போட்டிக்குத் தகுதி பெறுவர். மாநில அளவில் நடைபெறும் போட்டியில் வெற்றி பெறுபவர்கள், செப்டம்பர் மாதம் பஞ்சாப்பில் நடைபெறவுள்ள தேசிய அளவிலான போட்டிக்குத் தகுதி பெறுவர் என்றார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.