மதுரை சிறைக்குள் கஞ்சா, செல்லிடப்பேசி வீச்சு

மதுரை மத்தியச்சிறையில் ஞாயிற்றுக்கிழமை மாலையில் சிறைக்காவலர்கள் பணியில் ஈடுபட்டிருந்தனர்.
Updated on
1 min read

மதுரை மத்தியச்சிறையில் ஞாயிற்றுக்கிழமை மாலையில் சிறைக்காவலர்கள் பணியில் ஈடுபட்டிருந்தனர்.
அப்போது சிறையின் வெளியில் உள்ள பிரதான சாலையில் இருந்து மூன்று ஜஸ்கிரீம் பந்துகள் மற்றும் காலி குளிர்பான பாட்டில் ஒன்றும் சிறைக்குள் வீசப்பட்டது. இவை சிறை வளாகத்தில் விசாரணை கைதிகள் அடைக்கப்பட்ட இரண்டாம் தொகுதிக்கு அருகே விழுந்தன. அப்பகுதியில் பாதுகாப்புப்பணியில் இருந்த தமிழ்நாடு சிறப்புக் காவல்படையைச் சேர்ந்த காவலர் கண்ணன், அவற்றை கைப்பற்றி சிறை அதிகாரிகளிடம் ஒப்படைத்தார். சிறை அதிகாரிகள் அவற்றை சோதனையிட்டபோது மூன்று ஐஸ்கிரீம் பந்துகளிலும் 250 கிராம் கஞ்சா மற்றும் செல்லிடப்பேசி இருந்தது தெரியவந்தது.
இதையடுத்து அவற்றை பறிமுதல் செய்த சிறை அதிகாரிகள் சம்பவம் தொடர்பாக கரிமேடு காவல்நிலையத்தில் புகார் அளித்தனர். அதன்பேரில் போலீஸார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com