தேர்தலுக்கிடையே, அசாமில் காங்கிரஸ் எம்.பி. ராஜிநாமா! பாஜகவில் இணைந்தார்!தமிழகத்தில் கோடை வெப்பம் குறைய வாய்ப்பு.. அடுத்த ஒரு வாரத்திற்கு மழை!தில்லி குடியிருப்புக் கட்டடத்தில் தீ: 3 குழந்தைகள் உள்பட 9 பேர் பலிதுரந்தர் - 2 சிறப்பு திரையிடல்: ஹிந்தி தவிர பிறமொழிக் காட்சிகள் ரத்து!பியூஷ் கோயல் நாளை சென்னை வருகை! அதிமுக - பாஜக தொகுதிப் பங்கீடு இறுதியாகிறதா?தொடா்ந்து சரியும் தங்கம் விலை: இன்று எவ்வளவு குறைந்தது?இந்திய கம்யூனிஸ்ட் கட்சிக்கு 5 கட்சிகள் ஒதுக்கீடு!
/

முதன்மை கல்வி அலுவலகம் முற்றுகை: 33 பேர் கைது

மதுரை மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலகத்தை முற்றுகையிட்ட மாணவர் சங்கத்தைச் சேர்ந்த 8 பெண்கள் உள்ளிட்ட 33 பேரை போலீஸார் திங்கள்கிழமை கைது செய்தனர்.

News image
Updated On :5 ஜூன் 2018, 12:14 am

DIN

மதுரை மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலகத்தை முற்றுகையிட்ட மாணவர் சங்கத்தைச் சேர்ந்த 8 பெண்கள் உள்ளிட்ட 33 பேரை போலீஸார் திங்கள்கிழமை கைது செய்தனர்.
மதுரை தல்லாகுளம் பகுதியில் மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலகம் உள்ளது. இந்த அலுவலகத்தின் நுழைவு வாயில் முன், இந்திய மாணவர் சங்கம் மற்றும் ஜனநாயக வாலிபர் சங்கத்தைச் சேர்ந்தவர்கள் திடீரென கூடி, இலவச கட்டாயக் கல்விச் சட்டத்தின் கீழ், பள்ளிகளில் சேர்க்கப்பட்ட குழந்தைகளிடம் கல்விக் கட்டணம் வசூலிக்கப்படுவதை கண்டித்து கோஷமிட்டனர்.
இதுதொடர்பாக மெட்ரிக்பள்ளி ஆய்வாளரிடம் புகார் அளித்தும் நடவடிக்கை இல்லை என்றும், அதனால் முற்றுகைப் போராட்டத்தில் ஈடுபட்டிருப்பதாகவும் போராட்டக்காரர்கள் தெரிவித்தனர்.
இதனால், அங்கிருந்த தல்லாகுளம் போலீஸார் கல்வி அலுவலகத்தின் பிரதான இரும்புக் கேட்டை மூடினர். இருப்பினும், கல்வி அலுவலகத்துக்குள் நுழைய முயன்ற மாணவர் சங்கத்தினர் 33 பேரை போலீஸார் கைது
செய்து, குண்டுக்கட்டாக வேனில் ஏற்றி அழைத்துச்சென்றனர். அவர்கள் அனைவரும் தனியார் மண்டபத்தில் அடைத்து வைக்கப்பட்டு, மாலையில் விடுவிக்கப்பட்டனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.