வாடிப்பட்டியில் தனியார் துறை சிறப்பு வேலைவாய்ப்பு முகாம்
மதுரை மாவட்டம், வாடிப்பட்டியில் தனியார் நிறுவனத்தின் சிறப்பு வேலைவாய்ப்பு முகாம் மே 26 ஆம் தேதி (சனிக்கிழமை) நடைபெறுகிறது.இது குறித்து மதுரை மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலக துணை இயக்குநர்


மதுரை மாவட்டம், வாடிப்பட்டியில் தனியார் நிறுவனத்தின் சிறப்பு வேலைவாய்ப்பு முகாம் மே 26 ஆம் தேதி (சனிக்கிழமை) நடைபெறுகிறது.
இது குறித்து மதுரை மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலக துணை இயக்குநர் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு:
மதுரை மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகம் சார்பில், தனியார் துறை சிறப்பு வேலைவாய்ப்பு முகாம் வாடிப்பட்டியில் மே 26 ஆம் தேதி காலை 9 மணிக்கு தொடங்குகிறது.
வாடிப்பட்டி தாய் மெட்ரிக்குலேஷன் பள்ளி வளாகத்தில் நடைபெறும் இம்முகாமை, பேரிடர் மேலாண்மைத் துறை அமைச்சர் ஆர்.பி. உதயகுமார் தொடக்கி வைக்கிறார். இதில், ஏராளமான முன்னணி நிறுவனங்கள் பங்கேற்கின்றன. இதில், எட்டாம் வகுப்பு படித்தவர்கள் முதல் பட்டதாரிகள் வரை பங்கேற்கலாம். மேலும், பட்டயப் படிப்பு (டிப்ளமா), ஐ.டி.ஐ., செவிலியர், மருந்தாளுநர் படிப்பை முடித்தவர்களும் பங்கேற்று பயனடையலாம் என, அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...
தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...