வாக்குப்பதிவைக் கட்டாயமாக்க முடியாது! - உச்ச நீதிமன்றம்அவையில் தென் மாநிலங்களின் பலம் குறையாது: அமித் ஷா விளக்கம்தொகுதி மறுவரையறை முடிவைத் தற்காலிகமாக நிறுத்திவைக்க அரசுக்கு உத்தவ் தாக்கரே கோரிக்கை என்னுடைய தொகுதிக்கு மாதம் ஒருமுறை வருவேன்! விஜய் பேச்சுஅரசுத் திட்டங்களை மக்களே தீர்மானிக்கலாம்: தவெக தோ்தல் அறிக்கை!சரிந்து முடிந்த பங்குச்சந்தை! ஆட்டோ, எண்ணெய் & எரிவாயு பங்குகள் சரிவு!டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு உயர்வுஈரான் சிறையில் உள்ள நோபல் பரிசு பெற்ற நர்கிஸ் முகமதியின் உடல்நிலை கவலைக்கிடம்தொகுதி மறுவரையறையால் எந்த மாநிலத்திற்கும் இழப்பு ஏற்படாது: அர்ஜுன் ராம் மேக்வால்மூன்று மசோதாக்கள் மீதான வாக்கெடுப்பு நாளை (ஏப். 17) நடைபெறும்! - ஓம் பிர்லா
/

அரசுப் பேருந்து நடத்துநர் மீது தாக்குதல்: இளைஞர் கைது

மதுரையில் அரசுப் பேருந்து நடத்துனரைத் தாக்கிய இளைஞரை, போலீஸார் ஞாயிற்றுக்கிழமை கைது செய்தனர்.

Updated On :14 மே 2018, 12:09 am

மதுரையில் அரசுப் பேருந்து நடத்துனரைத் தாக்கிய இளைஞரை, போலீஸார் ஞாயிற்றுக்கிழமை கைது செய்தனர்.
சிவகங்கை மாவட்டம், திருப்புவனத்தைச் சேர்ந்தவர் சக்தி செல்வம் (42), அரசுப் போக்குவரத்துக் கழகத்தில் ஓட்டுநராகப் பணிபுரிந்து வருகிறார். இவர், சனிக்கிழமை ராமநாதபுரத்திலிருந்து மதுரை மாட்டுத்தாவணி எம்.ஜி.ஆர். பேருந்து நிலையத்துக்கு பேருந்தை ஓட்டி வந்துள்ளார். அப்போது, பேருந்தின் நடத்துனராக கணேசன் பணியிலிருந்துள்ளார். விரகனூர் வைகையாற்றுப் பாலம் அருகே பேருந்து வந்துகொண்டிருந்த போது, அவ்வழியாகச் சென்ற இரு சக்கர வாகனத்தை முந்திச் சென்றுள்ளனர். இதனால், இரு சக்கர வாகனத்தில் வந்த இருவரும், பேருந்தை வழிமறித்து நடத்துனர் கணேசனை தாக்கிவிட்டுச் சென்றனராம்.
இது குறித்து ஓட்டுநர் சக்திசெல்வம் அளித்த புகாரின்பேரில், அண்ணா நகர் போலீஸார் வழக்குப் பதிந்து, பனையூரைச் சேர்ந்த மணிகண்டன் (24) என்பவரைக் கைது செய்தனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.