மதுரையில் செவ்வாய்க்கிழமை (மே 15) முதல் ஒரு நாள் விட்டு ஒரு நாள் குடிநீர் விநியோகிக்கும் முறை தொடங்குவதாக மாநகராட்சி ஆணையர் அனீஷ்சேகர் அறிவித்துள்ளார்.
இதுகுறித்து அவர் திங்கள்கிழமை விடுத்துள்ள செய்திக்குறிப்பு:
பருவமழை சரியாக பெய்யாததாலும், வைகை அணை நீர் மட்டம் குறைந்து காணப்பட்டதாலும் மதுரை மாநகராட்சிப் பகுதிகளில் குடிநீர் விநியோகம் நான்கு நாள்களுக்கு ஒரு முறை என செயல்படுத்தப்பட்டு வருகிறது.
தற்போது முல்லைப் பெரியாறு மற்றும் வைகை அணைகளில் மதுரை மாநகராட்சியின் குடிநீர் தேவைக்கான கொள்ளளவு உள்ளது. எனவே, மதுரையில் குடிநீர் விநியோகம் ஒரு நாள் விட்டு ஒரு நாள் என செயல்படுத்தப்படுகிறது.
அதன்படி கோச்சடை, பெத்தானியபுரம், ஞாயிற்றுக்கிழமை சந்தை, பெருமாள் மேஸ்திரி வீதி, மணிநகர், கனகவேல் காலனி, பெரியார் பேருந்து நிலையம், ஆரப்பாளையம் மற்றும் அகிம்சாபுரம், செல்லூர், கோவலன் நகர், ஆண்டாள்புரம் உள்ளிட்ட பகுதிகளில் செவ்வாய்க்கிழமை (மே 15) அதிகாலை 4 மணி முதல் பகுதி வாரியாக இரவு 7 மணி வரை குடிநீர் விநியோகிக்கப்படும்.
புதன்கிழமை (மே 16) ஆரப்பாளையம், தமிழ்ச்சங்கம் சாலை, பேச்சியம்மன்படித்துறை உள்ளிட்ட பகுதிகளிலும், வியாழக்கிழமை (மே 17) தாசில்தார் பள்ளிவாசல், துரைசாமி நகர், பழங்காநத்தம், அரசரடி, ஜான்சிராணி பூங்கா, தெற்கு மாசி வீதி உள்ளிட்ட பகுதிகளிலும் குடிநீர் விநியோகிக்கப்படும்.
வரும் வெள்ளிக்கிழமை (மே 18) அனுப்பானடி சிந்தாமணி, வாழைத்தோப்பு பகுதிகள், தெற்கு கிருஷ்ணன் கோவில், மஹால், பந்தடி, காமராஜர்புரம், பாலரங்காபுரம் உள்ளிட்ட பகுதிகளிலும் குடிநீர் விநியோகிக்கப்படும். இதுபோல் அனைத்துப் பகுதிகளிலும் ஒருநாள் விட்டு ஒருநாள் தொடர்ந்து குடிநீர் விநியோகிக்கப்படும்.
குடிநீர் விநியோகத்தில் பிரச்னை ஏற்பட்டால் அந்தந்தப் பகுதியில் உள்ள மாநகராட்சி உதவி செயற்பொறியாளரை தொடர்பு கொண்டு பிரச்னைக்குத் தீர்வு காணலாம் என அதில் கூறப்பட்டுள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

மசோதாவை எதிர்த்தால் மோசமான விளைவுகள்: மக்களவையில் மோடி பேச்சு

தேசியவாதம் பற்றி பாடம் எடுக்க தேவையில்லை! பாஜக எம்பிக்கு ஆ. ராசா பதிலடி!

ஜனநாயகன் படத்தை கேபிள் டிவி, இணையதளங்களில் வெளியிட இடைக்கால தடை!

முதல்வர் ஸ்டாலின் பெண்களை அவமதிக்கிறார்: ரோகா குப்தா!
வீடியோக்கள்

தொகுதி மறுவரையறையும் எதிர்ப்பும்! தமிழ்நாடு முழுவதும் கருப்புக் கொடி போராட்டம்!
இணையதளச் செய்திப் பிரிவு

#ipl2026 | சிங்க நடைபோடும் சிஎஸ்கே: அடுத்து சன்ரைசர்ஸ்தான்! | Chennai Super Kings | Noor Ahmed |
தினமணி செய்திச் சேவை

தொகுதி மறுவரையறையில் யார் சொல்வது உண்மை ? | Delimitation | MK Stalin | Annamalai | BJP | DMK
தினமணி செய்திச் சேவை

தொகுதி மறுவரையறையை எதிர்த்து நாளை தமிழ்நாடு முழுவதும் கருப்புக் கொடி ஏற்றும் போராட்டம்!
இணையதளச் செய்திப் பிரிவு

