மதுரையில் வரும் ஜூன் 5 ஆம் தேதி ஓய்வூதியர்களுக்கான குறைதீர் கூட்டம் நடைபெறவுள்ளது. இதில் பங்கேற்க விரும்புவோர் வரும் 25 ஆம் தேதிக்குள் (வெள்ளிக்கிழமை) விண்ணப்பங்களை அளிக்க வேண்டும் என மாவட்ட ஆட்சியர் கொ.வீரராகவ ராவ் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து அவர் திங்கள்கிழமை வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு:
மதுரை மாவட்டத்தில் ஓய்வூதியர் குறைதீர்க்கும் நாள் கூட்டம் ஆட்சியர் அலுவலகத்தில் வரும் ஜூன் 5 ஆம் தேதி (செவ்வாய்க்கிழமை) காலை 10.30 மணிக்கு நடைபெறுகிறது. இக்கூட்டத்தில் பங்கேற்க விரும்பும் ஓய்வூதியர்கள் தங்களது குறைகளை குறிப்பிட்டு வரும் 25 ஆம் தேதிக்குள் விண்ணப்பங்களை மாவட்ட ஆட்சியருக்கு அனுப்பிவைக்கவேண்டும். மனுவின் மீது, ஓய்வூதியர் குறைதீர்க்கும் கூட்டம் எனக் குறிப்பிடவேண்டும். விண்ணப்பம் தொடர்பான ஆவணங்களில் இரு நகல்கள் அனுப்பிவைக்கவேண்டும். ஓய்வூதியர் பெயர் (குடும்ப ஓய்வூதியம் எனில் உறவுமுறை) குறிப்பிடவேண்டும். ஏற்கெனவே ஓய்வூதியம் பெற்று வந்தால் அவை சம்பந்தமான விவரம், ஓய்வூதியப் புத்தக எண் மற்றும் கருவூலத்தின் பெயர் ஆகியவற்றைக் குறிப்பிடவேண்டும்.
ஓய்வூதியப் பிரேரணை சென்னை மாநிலக் கணக்காயருக்கு அனுப்பப்பட்டிருந்தால் அதன் விவரத்தையும் குறிப்பிடவேண்டும். கோரிக்கைகள் தெளிவாகக் குறிப்பிடப்படவேண்டும். மதுரை மாவட்டத்தில் உள்ள அரசு அலுவலகங்களில் பணிபுரிந்து ஓய்வு பெற்றவர்கள் மட்டுமே விண்ணப்பிக்கவேண்டும் என அதில் கூறப்பட்டுள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது
லஞ்சக் கொள்ளைப் பணமழை பொழிந்தாலும் விசில் புரட்சிக்குத் தயாராகுங்கள்! - விஜய்

‘சிஎம் சார், 5 வருசத்துல என்ன பண்ணிருக்கீங்க?’ என கேட்டால்... ஸ்டாலின் விளக்கம்!
தவெக தலைவர் விஜய் இன்று எங்கு பிரசாரம் செய்கிறார்?

தமிழ்நாட்டை வஞ்சிக்க நினைப்பவர்களுக்கு நான் டேஞ்சர்! - முதல்வர் ஸ்டாலின்
வீடியோக்கள்

நாதக வேட்பாளர் வித்யாராணி வீரப்பன் கைது! கண்ணீர் விட்டு கதறியதால் பரபரப்பு!
தினமணி செய்திச் சேவை

டிரம்ப் மோடியை கட்டுப்படுத்துவதுபோல் பாஜக அதிமுகவை கட்டுப்படுத்துகிறது! - Rahul Gandhi
இணையதளச் செய்திப் பிரிவு

கருத்துக்கணிப்பு சொல்வதெல்லாம் உண்மையா ? | TN Election 2026 | TN Election Survey 2026
தினமணி செய்திச் சேவை

#ipl2026 | தோல்வியைச் சந்திக்காத பஞ்சாப்: எழுச்சி பெறாத லக்னௌ! | Punjab Kings | Priyansh Arya |
தினமணி செய்திச் சேவை

